📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 19, 2026 04:34 AM

கலே டெஸ்ட்| தனஞ்செயா டி சில்வா

கலே டெஸ்ட்| தனஞ்செயா டி சில்வா

கலே டெஸ்ட்| தனஞ்செயா டி சில்வா - சோனல் தினுஷா நிதானம்; தோல்வியைத் தவிர்க்குமா இலங்கை?

கலே டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 193 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, இலங்கை அணியின் வெற்றிக்கு 372 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.

Published : August 18, 2026 at 6:40 PM IST

கலே: இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை எடுத்துள்ளது.

இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, காலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தேவ்தத் படிக்கல்லின் அபாரமான சதத்தின் உதவியோடு தனது முதல் இன்னிங்ஸில் 462 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 167 ரன்களைக் குவித்தார்.

அவரைத் தவிர்த்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல். ராகுல் 82 ரன்களையும், துருவ் ஜூரெல் 51 ரன்களையும் விளாசினர். இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டுகளையும், கேஷர நுவந்த 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதனைத் தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் மிடில் ஆர்டர் பேட்டர் சோனல் தினுஷா சதம் விளாசினார்.

Innings break!Rishabh Pant top-scores with 66(69) in the 2nd innings as #TeamIndia set a target of 3⃣7⃣2⃣ for Sri Lanka!Over to our bowlers 💪Scorecard ▶️ https://t.co/M9LVyCAp8y#SLvIND pic.twitter.com/FAKQofDM5i

அதேபோல் விக்கெட் கீப்பர் பேட்டர் நிரோஷன் டிக்வெல்லா 82 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்கத் தவறினர். இதன் காரணமாக இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 284 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் மானவ் சுதர் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதன்பின், 178 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில், அதிகபட்சமாக ரிஷப் பந்த் 66 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 44 ரன்களையும், கே.எல். ராகுல் 35 ரன்களையும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இலங்கை அணியின் வெற்றிக்கு 372 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதன்பின், சவாலான இலக்கை நோக்கிப் போராடிய இலங்கை அணிக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. அணியின் டாப் ஆர்டர் வீரர்களான நிஷான் மதுஷ்கா 6 ரன்களிலும், தினேஷ் சண்டிமலுக்குக் கன்கஷன் மாற்றாகக் (Concussion Substitute) களமிறங்கிய அறிமுக வீரர் பசிந்து சூர்யபந்தாரா ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டுகளை இழந்தனர்.

Stumps on Day 4 in Galle! 🏟️Sri Lanka 84/4 in the 2nd innings#TeamIndia 6⃣ wickets away from victory in the opening #SLvIND Test.Scorecard ▶️ https://t.co/M9LVyCAp8y pic.twitter.com/Fhu9YGYeC1

அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான லஹிரு உதாரா 16 ரன்களுக்கும், கமிந்து மெண்டிஸ் 2 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் தனஞ்செயா டி சில்வா மற்றும் சோனல் தினுஷா இணை, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் சரிவைத் தடுத்து நிறுத்தியதுடன், ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தி வருகிறது.

இதன் மூலம் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் தனஞ்செய டி சில்வா 31 ரன்களையும், சோனல் தினுஷா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் மானவ் சுதர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதனையடுத்து இலங்கை அணி 288 ரன்கள் என்ற இலக்கை துரத்தி நாளை 5ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.