📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 19, 2026 05:31 AM

குவைத்தில் அதிக வட்டிக்கு கடன்: தமிழக தம்பதி கைது

குவைத்தில் அதிக வட்டிக்கு கடன்: தமிழக தம்பதி கைது

குவைத்தில் அதிக வட்டிக்கு கடன் கொடுத்த வழக்கில் தமிழக தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

குவைத்தின் மன்கப் பகுதியில் பிளாக்-3-ல் தங்கியிருந்து சட்டவிரோதமாக பாஸ்போர்ட்டை வாங்கி வைத்து கொண்டு அதிக வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருவது மற்றும் மிரட்டல் விடுவது தொடர்பாக அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தமிழக தம்பதி மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகாரிகள் பணத்திற்கு ஈடாக பலரிடமிருந்தும் சட்டவிரோதமாக பெற்று கைவசம் வைத்திருந்த 24 பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் சட்ட விரோதமாக விசா தொழிலும் கடந்த பல வருடங்களாக செய்து வந்தனர் என்பதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். குவைத் உட்பட வளைகுடா நாடுகளில் வட்டி தொழில் செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். கடந்த தினம் இவர்களுக்கு எதிரான இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேபோல் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் குவைத்தில் செயல்படும் சட்டவிரோத வீட்டு வேலை ஆள்சேர்ப்பு நிறுவனங்கள் மற்றும் வாட்ஸ்-அப் குழுக்களுக்கு எதிராக குவைத்திலுள்ள உரிமம் பெற்ற ஆள்சேர்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர்கள் இந்தியத் தூதரகம், குவைத் சுகாதார அமைச்சகம் மற்றும் குவைத் குற்றப் புலனாய்வுத்துறை போன்ற அதிகாரப்பூர்வ அமைப்புகளிடம் எழுத்துப்பூர்வ புகார்களை தாக்கல் செய்திருந்தனர் என்ற செய்திகள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.