📅 Sunday, 29 November 2026 IST | கார்த்திகை 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News November 29, 2026 06:02 AM

‘கண்ணாமூச்சி’ ஆட்டம் ஆடும் அமெரிக்கா: பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அசாத்திய நம்பிக்கை

‘கண்ணாமூச்சி’ ஆட்டம் ஆடும் அமெரிக்கா: பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அசாத்திய நம்பிக்கை

திருப்பூர்: அமெரிக்கா அடிக்கடி ஆட்டம் காட்டினாலும், இந்திய ஏற்றுமதியாளர்களும் அசர மாட்டார்கள்; இறுதிகட்ட பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அறிவித்திருப்பதால், பரஸ்பரம் பேச்சுவார்த்தை வாயிலாக, நியாயமான வரி நிர்ணயம் இருக்கும் என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதியில், 34 சதவீத பங்களிப்புடன் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தது. நான்கு ஆண்டுகளில் நம்ப முடியாத வளர்ச்சி ஏற்பட்ட நிலையில், டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின் நிலைமை மாறியது. திடீரென, இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு, 50 சதவீதம் வரி விதித்தது, ஒட்டுமொத்தமாக ஆட்டம் காண துவங்கிவிட்டது.

பொதுமக்கள் நலனுக்கு எதிரானது என்பதால், அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தலையிட்டு, 50 சதவீத வரியை ரத்து செய்தது. ஒவ்வொரு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், 14 நாடுகளுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்படுமென, அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் புதிய வரி உயர்வு அறிவிப்பு நிலையானது அல்ல; இருப்பினும் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி, போட்டி நாடுகளை காட்டிலும் குறைவாக வரி நிர்ணயம் செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தொழில்துறையினரின் எதிர்பார்ப்பு.

அமெரிக்க வர்த்தகம்

மிகவும்முக்கியம்

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன்: சர்வதேச சந்தைகளில் ஒப்பிடும் போது, அமெரிக்க சந்தை மிகவும் வலிமையானது. இந்தியாவுக்கு, அதிகபட்ச வளர்ச்சி வாய்ப்புகளை அளிக்கும் சந்தையாகவும் இருக்கிறது. அதனால்தான், ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகின்றனர். ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்காத அளவுக்கும், போட்டி நாடுகளை சமாளிக்கும் அளவுக்கும், சரியான வரியை நிர்ணயம் செய்ய, மத்திய அரசு பல்வேறு வழிகளில் நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த ஒரு மாதத்துக்குள், இந்தியா –அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறும் என்று நம்புகிறோம்.

சுமூக தீர்வு நிச்சயம்

ஏற்பட வாய்ப்பு

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொருளாளர் கோபாலகிருஷ்ணன்:

இந்திய அதிகாரிகள் குழு, பலகட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளது; பரஸ்பரம் கருத்தொற்றுமை ஏற்று, வரி நிர்ணயம் இருக்கும். இறுதிகட்ட பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, அமெரிக்க தரப்பு தங்களது கருத்தை தெரிவித்துள்ளது. ஜன.. 5ம் தேதிக்கு பிறகுதான், வரி நிர்ணயம் தொடர்பான இறுதி நிலவரம் தெரியவரும். அமெரிக்க கச்சா எண்ணெயை, இந்தியாவில் சுத்திகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் இருப்பதால், இந்தியாவுக்கு சாதகமான வகையில் வரி நிர்ணயம் இருக்குமென நம்புகிறோம். நடைமுறையில், 10 சதவீத வரி தொடர்கிறது; நிச்சயமாக, சுமூக தீர்வு கிடைக்கும்.

அமெரிக்க வரி உயர்வால், 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் இந்தியாவுக்கு இழப்பு ஏற்பட்டது. ஆடை கொள்முதல் குறைந்தது. திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளை சார்ந்திருக்கிறது. வங்கதேசம், வியட்நாம் போட்டியை சமாளித்து, புதிய ஆர்டர்களை ஈர்க்க முடியுமா என்ற பேச்சு உள்ளது. அமெரிக்காவிடமிருந்து அடுத்த அறிவிப்பு வந்திருக்கிறது; 14 நாடுகளுக்குப் புதிய வரி விதிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு, 17 அல்லது 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.வரி விகிதம் இன்று 25, நாளை 17 சதவீதம் என மாறிக்கொண்டே இருக்கும். அதனை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், சொன்ன நாளில் சரக்கை அனுப்புவது, கேட்ட தகவலைத் தாமதமின்றித் தருவது, தரத்தில் குறை நேர்ந்தால் பொறுப்பேற்பது ஆகியவை நம் கையில்தான் உள்ளன. இவற்றில் நாம் உறுதியாக நின்றால், வரி எந்தப் பக்கம் சாய்ந்தாலும் வாங்குபவர் திருப்பூரைத் தேடி வருவார்.– –ஜெய்பிரகாஷ்‘ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்ட வழிபாட்டி