📅 Friday, 27 November 2026 IST | கார்த்திகை 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports November 27, 2026 08:31 AM

கருப்பு கண்ணாடிக்குள் கண்ணீர்.. உடைந்து நின்ற சிராஜ்.. கம்பீர் முடிவால் ஆவேசமான முரளி கார்த்திக்

கருப்பு கண்ணாடிக்குள் கண்ணீர்.. உடைந்து நின்ற சிராஜ்.. கம்பீர் முடிவால் ஆவேசமான முரளி கார்த்திக்

கருப்பு கண்ணாடிக்குள் கண்ணீர்.. உடைந்து நின்ற சிராஜ்.. கம்பீர் முடிவால் ஆவேசமான முரளி கார்த்திக்

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கருப்புக் கண்ணாடி அணிந்து களத்தில் சோகமாக நின்ற காட்சி இந்திய ரசிகர்களை உலுக்கியுள்ளது. நேரலையில் இதைப்பார்த்த முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக், சிராஜ் அழுது கொண்டிருக்கிறாரா என வேதனையுடன் கேள்வி எழுப்பி இந்திய அணி நிர்வாகத்தை மிகக் கடுமையாக சாடியுள்ளார்.

சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய முரளி கார்த்திக், "சிராஜ் கண்ணாடி அணிந்து நிற்கிறார், அவர் அழுது கொண்டிருக்கிறாரா? அவர் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய ஒரு வீரர். சிலர் அணியில் இருந்து நீக்கப்பட்டால் அதை சாதாரணமாக கடந்து சென்றுவிடுவார்கள். ஆனால் சிராஜ் அப்படிப்பட்டவர் அல்ல. தலைவலியோ, கால்வலியோ எதுவாக இருந்தாலும் களத்தில் அணிக்காக உயிரைக் கொடுத்து பந்துவீசுபவர். வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரிலும் அவரை ஏதோ ஒரு போட்டியில் மட்டும் ஆட வைத்தார்கள். இங்கும் தொடர்ந்து 2வது டெஸ்டிலும் வாய்ப்பு தரவில்லை. சிராஜ் நல்ல பார்மில் இல்லை, வலைப் பயிற்சியில் நன்றாக பந்து வீசவில்லை என்றால் அவரை எதற்காக நியூசிலாந்துக்கு கூட்டிச் சென்றீர்கள்?" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்தியாவுக்காக அதிகபட்சமாக 43 விக்கெட்டுகளை எடுத்துள்ள முதன்மை பந்துவீச்சாளர் சிராஜ்தான். கடந்த ஆண்டு ஓவல் டெஸ்டில் 9 விக்கெட்டுகளை சாய்த்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். கடந்த 2020ல் ஆஸ்திரேலியாவில் அறிமுகமான சிராஜ், எந்தவொரு வெளிநாட்டு டெஸ்ட் தொடரிலும் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டதே இல்லை. ஆனால் கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள பசுமையான, வேகப் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளத்திலும் அன்ஷுல் கம்போஜ் மற்றும் அறிமுக வீரர் குர்னூர் ப்ராரை ஆட வைத்துவிட்டு சிராஜை புறக்கணித்துள்ளனர்.

இந்தியா - நியூசிலாந்து 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீசிய இந்தியா, தொடக்க செஷனில் விக்கெட் எடுக்க முடியாமல் திணறியது. டாம் லாதம் கொடுத்த கேட்ச்சை ராகுல் தவறவிட்டார். உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்திலும் சிராஜ் போன்ற மேட்ச் வின்னரை ஓரம் கட்டிவிட்டு இந்திய அணி களத்தில் தவித்து வருவது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.