📅 Sunday, 29 November 2026 IST | கார்த்திகை 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics November 29, 2026 06:01 PM

லோக்சபாவில் திமுக எம்பிக்களின் இருக்கை மாற்றியமைப்பு

லோக்சபாவில் திமுக எம்பிக்களின் இருக்கை மாற்றியமைப்பு

திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா, பார்லி.யில் தாக்கல் ஆகிறது. இதற்காக சிறப்பு பார்லி. கூட்டத்தொடர் நவ.30ம் தேதி தொடங்குகிறது.

கூட்டத்தொடரில் லோக்சபாவில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் ஆகும் போது அதை ஆதரிப்போம் என்று திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. திமுகவின் ஆதரவு தேசிய அரசியலில் பேசுபொருளாகிவிட்ட சூழலில், லோக்சபாவில் அக்கட்சியின் எம்பிக்களின் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன.

திமுகவின் தனி இருக்கை கோரிக்கையை சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்றுக் கொண்டுள்ளார். லோக்சபாவின் செயலாளர் தரப்பில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, திமுக 22 எம்பிக்களின் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. அக்கட்சியின் எம்பிக்கள் காங்கிரசிடம் இருந்து விலகி லோக் சபாவில் தனியாக அமர்வர்.

திமுக எம்பிக்களுடன் தேசியவாத காங் (சரத்பவார் பிரிவு) எம்பிக்கள் 8 பேர் என ஒட்டு மொத்தமாக 97 எம்பிக்களின் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றன.