📅 Saturday, 22 August 2026 IST | ஆவணி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 22, 2026 08:04 AM

``மேகதாது அணை... எச்சரிக்கவே 3 தமிழர்கள் சுட்டுக் கொலை!’’

``மேகதாது அணை... எச்சரிக்கவே
3 தமிழர்கள் சுட்டுக் கொலை!’’

``மேகதாது அணை... எச்சரிக்கவே 3 தமிழர்கள் சுட்டுக் கொலை!’’

பா.ம.க உண்மை அறியும் குழு ‘பகீர்’

“மூன்று தமிழர்கள் வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், கர்நாடக அரசு இன்னும் ஆரம்பகட்ட விசாரணையைக்கூடத் தொடங்கவில்லை” என்று குற்றம்சாட்டுகிறார்கள் பா.ம.க உண்மை அறியும் குழுவினர்.

கர்நாடக மாநிலம், ஹனூர் அருகே வனத்துறையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுந்துயரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பா.ம.க உண்மை அறியும் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி, திரும்பியிருக்கின்றனர்.

அது பற்றி தருமபுரி முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடேஷ்வரனிடம் பேசியபோது, “மேட்டூர் அணை கட்டுவதற்காக வெளியேற்றப்பட்ட தமிழர்கள், சாம்ராஜ்நகர் மாவட்டத்திலுள்ள ஹனூர் பகுதியில் இன்றுவரை ரொம்பவும் பின்தங்கி, கூலி வேலைக்கும், ஆடு மாடு மேய்த்தும் கஷ்ட ஜீவனம் செய்துவருகிறார்கள். நாங்கள் சென்ற மரிமங்கலா, ஜெகன்தாதா தொட்டி, லாசர் தொட்டி கிராமங்களில் சாலை வசதி, குடிநீர் வசதி என அடிப்படை வசதிகள்கூட முழுமையாக இல்லை. பள்ளிக்கூடத்துக்கு 8 கி.மீ தூரம் போக வேண்டும்.

சம்பவம் நடந்த அன்று மேய்ச்சலுக்குப் போன மாடு திரும்பி வராததால் தேடிச் சென்ற இவர்கள், இரவானதால் அந்தப் பகுதியிலேயே படுத்துத் தூங்கியுள்ளனர். அதிகாலையில் அவர்களைச் சுற்றிவளைத்த வனத்துறையினர், முதலில் டேவிட் குமாரைச் சுட்டிருக்கின்றனர். சத்தம் கேட்டு விழித்த அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் ஆகியோர், `எங்களைச் சுடாதீர்கள்’ என்று கையெடுத்து கும்பிட்டும் சுட்டிருக்கின்றனர்.

மகிமைதாஸ் குண்டடிபட்டு தப்பி வந்ததால்தான் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. கொல்லப்பட்ட அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர், டேவிட் குமார் ஆகியோர் மீது எந்தக் குற்ற வழக்கும் இல்லை. காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் சரக்கு வாகனத்தில் மைசூருக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். அதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மூன்று பெண் குழந்தைகளின் தந்தையான டேவிட் குமார், 15 ஆண்டுகளாகக் கேரளாவில் பணியாற்றிவந்த நிலையில், ஒரு வாரத்துக்கு முன்புதான் ஊருக்குத் திரும்பி, உயிரிழந்தது மிகுந்த வேதனைக்குரியது.தமிழர்களுக்கு ஆதரவாக, கன்னட அமைப்புகள் குரல் கொடுப்பது ஆறுதலாக இருந்தாலும், ‘மேகதாது விவகாரத்தில் தமிழர்கள் கர்நாடகாவுக்கு வரக் கூடாது’ என்ற எச்சரிக்கையாகவே, இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இந்தச் சம்பவத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வனத்துறையினர்மீது வழக்கு பதிவுசெய்து தண்டனை வழங்குவதுடன், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும். நீதி கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகுவோம்” என்றார்.