📅 Saturday, 22 August 2026 IST | ஆவணி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 22, 2026 11:03 AM

இன்றும் தங்கம் விலை அதிகரிப்பு; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.2,800 உயர்வு

இன்றும் தங்கம் விலை அதிகரிப்பு; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.2,800 உயர்வு

சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 22) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு 100 ரூபாய் அதிகரித்து 14,950 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றம் காரணமாக தமிழகத்திலும் ஆபரண தங்கத்தின் விலை மாற்றம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 20) ஆபரண தங்கம் கிராம் 14,600 ரூபாய்க்கும், சவரன், 1,16,800 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 260 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய நிலவரம்

நேற்று மாலை தங்கம் கிராமுக்கு 140 ரூபாய் அதிகரித்து, 14,850 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,120 ரூபாய் உயர்ந்து, 1,18,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 270 ரூபாய்க்கு விற்பனையானது. இதையடுத்து, நேற்று மட்டும் தங்கம் சவரனுக்கு 2,000 ரூபாய், வெள்ளி கிலோவுக்கு 10,000 ரூபாய் அதிகரித்தன.

இன்றைய நிலவரம்

கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 2800 ரூபாய் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்