📅 Thursday, 13 August 2026 IST | ஆடி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 13, 2026 09:04 AM

மேகதாது அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கர்நாடகாவில் இன்று பந்த் அறிவிப்பு: பஸ்கள் ஓடுமா..?

மேகதாது அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கர்நாடகாவில் இன்று பந்த் அறிவிப்பு: பஸ்கள் ஓடுமா..?

மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்றும், தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்தும் கர்நாடகத்தில் இன்று (வியாழக்கிழமை) பந்த் நடத்தப்பட உள்ளது.

பந்த் நடத்த அழைப்பு

காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. கர்நாடகத்தில் இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் போதிய அளவு பருவ மழை பெய்யவில்லை.

இதனால் காவிரி படுகையில் உள்ள அணைகள் நிரம்பவில்லை. இதற்கிைேடய, கடந்த மாதம் (ஜூலை) தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பு

கர்நாடகவில் பந்த் நடத்த கடந்த மாதம் 31-ந் தேதி அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு, காவிரி படுகையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணை தவிர்த்து மற்ற 3 அணைகளும் (கபினி, ஹாரங்கி, ஹேமாவதி) நிரம்பும் தருவாயில் உள்ளது. அணைகளுக்கு தண்ணீர்வரத்தும் அதிகரித்துள்ளதால், காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கர்நாடகத்தில் இன்று (வியாழக்கிழமை) திட்டமிட்டபடி பந்த் நடைபெறுமா?, இல்லையா? என்ற கேள்வி எழுந்தது.

அதே நேரத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடுவதற்கு கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு கர்நாடக அரசியல் கட்சி தலைவர்கள், கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள், விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து திட்டமிட்டபடி பந்த் நடக்கும் என்று கூறப்பட்டது.

ஆதரவு இல்லை

பஸ்கள் ஓடுமா?

அதே நேரத்தில் பந்த் நடத்த ஆதரவு அளிக்கும்படி கோரி பெங்களூருவில் உள்ள வணிக வளாகங்கள், ஓட்டல்கள், கடைகளுக்கு கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் நேற்று வேண்டுகோள் விடுத்தார். பின்னர் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அவரை போலீசார் கைது செய்தனர்.

எனவே இன்று நடைபெறும் முழுஅடைப்பு காரணமாக கடைகள் மூடப்படுமா?, பஸ்கள், ஆட்டோக்கள், கார்கள் ஓடுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பந்த் நடத்த வேண்டாம்