மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிரசாதம்; முதல்வர் விஜய்க்கு வழங்கினார் அமைச்சர் ரமேஷ்
சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பிரசாதத்தை இன்று (செப்டம்பர் 21) முதல்வர் விஜய் இடம் நேரில் சென்று அமைச்சர் ரமேஷ் வழங்கினார்.
கடந்த செப்டம்பர் 17ம் தேதி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக நடந்தது. இன்று கோவில் பிரசாதத்தை முதல்வர் விஜய்யை நேரில் சென்று சந்தித்து ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் வழங்கினார். இந்தப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து அமைச்சர் ரமேஷ் கூறி இருப்பதாவது:
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 17ம் தேதி வெகு விமரிசையாகவும், அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையிலும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று முதல்வர் விஜய்க்கு நேரில் வழங்கப்பட்டது.அப்போது, முதல்வர் விஜய் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றதற்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.