📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 12, 2026 02:04 AM

மீண்டும் ரூ. 1.11 லட்சத்தை தாண்டி நகைப் பிரியர்களை சோதிக்கும் தங்கம் விலை

மீண்டும் ரூ. 1.11 லட்சத்தை தாண்டி நகைப் பிரியர்களை சோதிக்கும் தங்கம் விலை

மீண்டும் ரூ. 1.11 லட்சத்தை தாண்டி நகைப் பிரியர்களை சோதிக்கும் தங்கம் விலை

வெள்ளி இன்று ஒரு கிராம் ரூ. 245க்கும், ஒரு கிலோ ரூ. 2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Published : October 10, 2026 at 10:48 AM IST

சென்னை: ஆபரண தங்கம் 22 காரட்டின் விலை இன்று சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,11,040-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை இனிவரும் நாட்களில் இன்னும் ஏற வாய்ப்பிருப்பதாக உலகளாவிய ஆய்வு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு பாதுகாப்பு கருதி மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கம் வாங்கி குவிப்பதே முக்கிய காரணம் என்கின்றனர்.

மேலும், அமெரிக்க ஃபெடரல் வங்கியானது தற்போது கொள்கை மாற்றங்களை மேற்கொண்டிருப்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது தங்கள் ஆர்வத்தை திருப்பியுள்ளனர். இதுவும் உலக அளவில் தங்கம் விலை உயர்வதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

தங்கம் விலை ஏற்கனவே ரூ. 1.10 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், இன்னும் அதிகரித்தால் சாமானியர்களுக்கு தங்கம் வெறும் கனவாகவே மாறிவிடும் என்ற கவலை எழுந்திருக்கிறது.

ஆபரண தங்கத்தின் விலை நேற்று (அக்டோபர் 9) கிராமுக்கு ரூ. 105 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,815-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 65 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 13,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ. 840 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,10,520-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 520 அதிகரித்து ரூ. 1,11,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ. 13,880

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ. 1,11,040

வெள்ளி ஒரு கிராம் - ரூ. 245

வெள்ளி ஒரு கிலோ - ரூ. 2,45,000

கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை

வெள்ளி விலையில் கடந்த வாரத்தில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் பெரிய அளவில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.

கடந்த சில நாட்களாக ஒரு கிராம் ரூ. 245-க்கும், ஒரு சவரன் ரூ. 2,45,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று விலை மாற்றமின்றி அதே விலையில் விற்பனையாகிறது.