மு.க.அழகிரியின் மகனுக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை நடத்த சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவு
மு.க.அழகிரியின் மகன் தயாநிதிக்கு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்ய மதுரை சி.பி.ஐ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சி.பி.ஐ. கோர்ட்டு
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மீண்டும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்ய மதுரை சி.பி.ஐ, கோர்ட்டு இன்று (29.08.2026) உத்தரவு பிறப்பித்துள்ளது. ரூ.256.44 கோடி பணமோசடி வழக்கில் 3-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள துரை தயாநிதி பக்கவாதம், ஞாபக மறதியால் விசாரணையை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை என ஏற்கெனவே அறிக்கை சமர்பிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துரை தயாநிதி, கிரிக்கெட் போட்டியை பார்த்ததாகவும், தேர்தலில் வாக்களித்ததாகவும் வெளியான காணொளியை சுட்டிக்காட்டி துரை தயாநிதியை மருத்துவப் பரிசோதனை செய்ய சி.பி.ஐ மனு தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் துரை தயாநிதியின் உடல் மற்றும் மனநிலையை மீண்டும் பரிசோதிக்க உத்தரவிட்ட கோர்ட்டு, மருத்துவர் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டது.
நீதிபதி கேள்வி