📅 Saturday, 01 August 2026 IST | ஆடி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 01, 2026 01:30 AM

மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!

மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!

மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!

மூன்று தீபாவளிகளை கடந்தும் திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுலாக ஓடிய தமிழ் படம். இன்று வரை முறியடிக்கப்படாத அந்த வரலாற்றுச் சாதனையின் பின்னணி என்ன?

மூன்று தீபாவளி வரை ஓடிய வரலாற்றுச் சாதனை

தமிழ் சினிமா வரலாற்றில் இன்று வரை யாராலும் முறியடிக்க முடியாத சாதனையை படைத்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றது 'ஹரிதாஸ்'. 1944-ம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்த இந்த படம், தொடர்ந்து மூன்று தீபாவளிகளைக் கடந்தும் திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுலாக ஓடியது. தமிழ் சினிமாவில் இதுபோன்ற சாதனையை வேறு எந்த திரைப்படமும் நிகழ்த்தவில்லை.

உச்சத்திற்கு சென்ற தியாகராஜ பாகவதர்

தியாகராஜ பாகவதரின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த இந்த படத்தில், பெண்கள் மீது மோகம் கொண்ட ஹரிதாஸ் என்ற மனிதன், தனது தவறுகளை உணர்ந்து பெற்றோருக்காக வாழும் நல்ல மனிதனாக மாறும் கதை சொல்லப்பட்டது. இறுதியில் தாய்-தந்தை பக்தியால் இறைவனின் அருளைப் பெறும் உணர்ச்சிப்பூர்வமான திரைக்கதை, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பாகவதரின் நடிப்பு, டி.ஆர். ராஜகுமாரியின் கதாபாத்திரம், மேலும் "மன்மத லீலையை வென்றவர் உண்டோ?" உள்ளிட்ட பாடல்கள் படத்தை காலத்தால் அழியாத படைப்பாக மாற்றின. இந்த வெற்றிக்குப் பிறகு, ஆண்டுக்கு ஒரு படம் மட்டுமே நடிப்பேன் என்ற தனது முடிவை மாற்றி, பல படங்களில் நடிக்க பாகவதர் ஒப்பந்தமானார்.

சிறைவாசத்துக்குப் பிறகு மாறிய திரைப்பயணம்

ஆனால் இந்த உச்சம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. பத்திரிகையாளர் சி. என். லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதால், பாகவதர் சுமார் மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தார். பின்னர் நீதிமன்றத்தில் விடுதலை பெற்றாலும், அவரது திரை வாழ்க்கை பழைய நிலைக்கு திரும்பவில்லை.

சொந்த பணத்தில் தயாரித்த 'ராஜமுக்தி', 'அமரகவி' உள்ளிட்ட படங்கள் தோல்வியடைந்ததால், செல்வம், சொத்து அனைத்தையும் இழந்தார். உடல்நலக் குறைவு, பார்வை பிரச்சினை, மறதி ஆகியவற்றாலும் திரையுலகில் மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை.

ஒரு காலத்தில் தங்கத் தட்டில் உணவருந்தி, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டாரான தியாகராஜ பாகவதர், இறுதியில் வறுமையிலும் உடல்நலக் குறைவிலும் 1959-ம் ஆண்டு சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். ஒரு சாதனை படத்தின் வெற்றியும், ஒரு வழக்கின் தாக்கமும், ஒரு சூப்பர்ஸ்டாரின் வாழ்க்கையை எவ்வளவு மாற்றிவிட முடியும் என்பதற்கு அவரது வாழ்க்கையே மிகப்பெரிய உதாரணமாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி