📅 Saturday, 01 August 2026 IST | ஆடி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 01, 2026 02:32 AM

அக்டோபர் முதல் வங்கியின் அனைத்து கிளைகளிலும் ஒரே வட்டி தான் : RBI உத்தரவு

அக்டோபர் முதல் வங்கியின் அனைத்து கிளைகளிலும் ஒரே வட்டி தான் : RBI உத்தரவு

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் வைக்கப்படும் FD மற்றும் பிற சேமிப்பு திட்டங்களின் வைப்புத்தொகையில் RBI பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதில் குறிப்பாக அக்டோபர் 1 முதல் எந்தவொரு வணிக வங்கியும் வெவ்வேறு கிளைகளில் FD வைப்புத்தொகைக்கு ஒரே வட்டி விகிதம் தான் இருக்க வேண்டும். வெவ்வேறு கிளைகளுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்கள் கூடாது என RBI உத்தரவு போட்டுள்ளதுஇதன் மூலம் நீங்கள் பெரிய நகரங்களில் கணக்கு துவங்கினாலும் சரி அல்லது சிறிய கிராமத்தில் கணக்கு துவங்கினாலும் சரி சீரான ஒரே வட்டி விகிதம் தான் இருக்கும். உங்களுடைய FD மற்றும் RD திட்டங்களுக்கு ஒரே வட்டி விகிதம் தான். இந்த உத்தரவு அக்டோபர் 1 முதல் அமலுக்கு வர இருக்கின்றதுஇந்த புது உத்தரவால் கிடைக்கும் பயன்கள்*இனி வாடிக்கையாளர்கள் சிறந்த வட்டி விகிதத்தை பெற ஒவ்வொரு கிளையாக அலைய வேண்டிய அவசியம் இல்லை*மெட்ரோ நகரங்களில் இருக்கும் கிளைகள் சிலவற்றில் சிறந்த சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது இந்த புதிய உத்தரவால் சென்னை போன்ற பெரு நகரங்களில் இருக்கும் வங்கிகளில் கிடைக்கும் சலுகைகள் அனைத்தும் தற்போது கிராமப்புற வங்கி கிளைகளிலும் கிடைக்கும்*வங்கி அதிகாரிகள் இனி தானாக எந்த ஒரு வாடிக்கையாளர்களுக்கும் கூடுதல் வட்டி விகிதத்தை வழங்க முடியாது*இந்த விதி 3 கோடிக்கும் குறைவான சில்லறை வைப்புத்தொகைக்கு முற்றிலும் பொருந்தும்வட்டி விகிதத்தை வெளியிடுவது கட்டாயம்வங்கிகளின் வெளிப்படைத்தன்மையை மேலும் அதிகரிக்கவும் RBI ஒரு உத்தரவு போட்டுள்ளனர். அதாவது அனைத்து வங்கிகளும் காலை 10 மணிக்குள் அனைத்து கால அளவுக்கான புதுப்பிக்கப்பட்ட வட்டி விகிதத்தை தங்கள் வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அப்டேட் செய்ய வேண்டும் என RBI உத்தரவு போட்டுள்ளனர்.இடையே ஏதேனும் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டால் அதனை உடனடியாக இணையதளத்தில் அப்டேட் செய்ய வேண்டும் என RBI புது விதியை கொண்டுவந்துள்ளனர். இதனால் வாடிக்கையாளர்களுக்கு தெளிவு கிடைக்கும் ,வங்கியின் வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கும்