📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 16, 2026 09:01 AM

நாளுக்கு நாள் அதிகமான நடிகரின் சேட்டைகள்.. நடிகையின் ஒட்டல் உரசலால் கடுப்பான ரசிகர்கள்

நாளுக்கு நாள் அதிகமான நடிகரின் சேட்டைகள்.. நடிகையின் ஒட்டல் உரசலால் கடுப்பான ரசிகர்கள்

சென்னை: சினிமாவில் சில நடிகர்களுக்கு ரசிகர்கள் கொடுக்கும் இடம் தனி. திருமணமாகி, குடும்பம், குழந்தைகள் என வாழ்க்கை வேறு கட்டத்திற்குச் சென்ற பிறகும் அந்த நடிகர்களின் மீதான ரசிகர்களின் அன்பு குறைவதில்லை. ஆனால், சமீபகாலமாக பிரபல நடிகர் ஒருவரின் சில செயல்பாடுகள் அவரது ரசிகர்களையே தர்மசங்கடத்தில் ஆழ்த்தி வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் அந்த நடிகர், தற்போது குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருக்கிறார். மனைவி, குழந்தைகள் என செட்டிலாகிவிட்ட நிலையிலும், அவருடன் நடித்து வரும் நடிகை ஒருவரிடம் அளவுக்கு அதிகமான நெருக்கம் காட்டுவதாக பேச்சு அடிபடுகிறது. ஆரம்பத்தில் இதையெல்லாம் ரசிகர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம்.

முட்டுக்கொடுக்க முடியலையே: நடிகருக்கும் அந்த நடிகைக்கும் இடையே இருக்கும் நெருக்கம் குறித்து கேள்விகள் எழுந்தபோதெல்லாம் ரசிகர்கள்தான் அவருக்கு ஆதரவாக நின்றார்களாம். இருவரும் நல்ல நண்பர்கள், க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ், அக்கா - தம்பி என பல விதங்களில் விளக்கம் கொடுத்து சமாளித்து வந்தார்களாம்.

ஆனால், நாளுக்கு நாள் நடிகையின் மீதான நடிகரின் அக்கறையும், முக்கியத்துவமும் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்ததால், இப்போது அவருக்கு முட்டுக்கொடுக்கவே முடியவில்லை என ரசிகர்கள் புலம்பி வருகிறார்களாம்.

குடும்பத்தை விட்டுட்டு இதெல்லாம் தேவையா?: நடிகர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதைவிட, சம்பந்தப்பட்ட நடிகையுடன் அதிக நேரம் செலவிடுவது போன்ற தோற்றம் உருவாகி வருவதுதான் ரசிகர்களின் முக்கியமான ஆதங்கமாம். அதிலும், நடிகையை பொது நிகழ்ச்சிகள் மற்றும் போராட்டங்கள் உள்ளிட்ட இடங்களுக்குக்கூட அழைத்துச் செல்வது அவர்களுக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

"அவர் அவருடைய வேலையை பார்த்துக்கொண்டு இருந்தால் பிரச்சினையே இல்லை. ஆனால், எதற்காக நடிகையையும் கூடவே அழைத்துக்கொண்டு இப்படி வெளிப்படையாக சுற்ற வேண்டும்?" என்ற ரீதியில் ரசிகர்கள் மத்தியில் பேச்சுகள் எழுந்துள்ளதாம்.

வேதனையில் ரசிகர்கள்: ஒரு காலத்தில் நடிகர் என்ன செய்தாலும் அதற்கு ஆதரவாக நின்ற ரசிகர்களே, தற்போது அவரது சில நடவடிக்கைகளை பார்த்து வருத்தத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. நடிகர் - நடிகை இடையேயான உறவு உண்மையில் என்ன என்பது அவர்களுக்கே வெளிச்சம் என்றாலும், குடும்ப வாழ்க்கையில் இருக்கும் நடிகர் இவ்வளவு நெருக்கமாக பழகுவது தேவையா என்பதுதான் ரசிகர்களின் தற்போதைய கேள்வியாக இருக்கிறதாம்.

அதிலும், இதுவரை நண்பர்கள் என்ற பெயரில் இருவரது நெருக்கத்தையும் சமாளித்து வந்த ரசிகர்களுக்கே, இப்போது தொடர்ந்து விளக்கம் கொடுப்பது கஷ்டமாகிவிட்டதாம். இதனால் சம்பந்தப்பட்ட நடிகர் மீது அவரது ரசிகர்களிடையே உருவாகியிருக்கும் இந்த அதிருப்தி, வரும் நாட்களில் இன்னும் பெரிதாகுமா என்பதுதான் கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.