பட்டியலிடப்படாத பங்குகள் வர்த்தகம் 70 சதவிகிதம் வரை வீழ்ச்சி
கடந்த 2025 வரை முதலீட்டாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற, பங்கு சந்தைகளில் பட்டியலிடப்படாத பங்குகளின் வர்த்தக அளவு தற்போது 40 முதல் 70 சதவீதம் வரை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
மற்றவர்கள் வாங்குவதால் அவசரப்பட்டு வாங்கும் 'போமோ' மனநிலை மாறி, பெரும் பணக்காரர்கள் மற்றும் அவர்களின் சொத்து நிர்வாக அலுவலகங்கள் மத்தியில் எச்சரிக்கை உணர்வு மேலோங்கியுள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த சந்தையின் மந்தநிலை, ஐ.பி.ஓ., சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், நடப்பு 2026ல் நிறுவனங்களை பட்டியலிடுதல் மிக குறைந்த அளவிலேயே நிதானமாக நடந்து வருகிறது.
சாதகமான சந்தை சூழல் வரும் வரை புரமோட்டர்கள் பங்கு வெளியீட்டை தள்ளி வைத்து வருகின்றனர்.
1 மிக குறைந்த எண்ணிக்கையிலான குறிப்பிட்ட பங்குகளில் மட்டுமே வர்த்தகம் நடப்பது
2 பட்டியலிடப்படாத சந்தையில் பங்குகளை உடனடியாக விற்று பணமாக்க முடியாதது
3 தள்ளுபடி விலையிலும் வாங்க ஆள் இல்லாதது.