📅 Wednesday, 05 August 2026 IST | ஆடி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health August 05, 2026 07:02 PM

ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் 8, 9

ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் 8, 9

ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் 8, 9-ல் விரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று வரும் முன்னுரிமை (PHH) மற்றும் அந்தியோதயா அண்ணயோஜனா (AAY) குடும்ப அட்டைதாரர்களின் தரவுகளைத் துல்லியப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பயனாளிகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய ஆதார் சரிபார்ப்பு வாயிலாக பயோமெட்ரிக் (விரல் ரேகை) பதிவு செய்யும் பணி மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இன்னும் சுமார் 8 லட்சம் உறுப்பினர்கள் தங்களது விரல் ரேகையை பதிவு செய்யாமல் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

சிறப்பு முகாம் அமைப்பு

உணவு வழங்கல் துறை அறிவுறுத்தல் இதனைத் தொடர்ந்து, விரல் ரேகை பதிவு செய்யாத கார்டுதாரர்களின் வசதிக்காக வரும் ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் (சனி மற்றும் ஞாயிறு) அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

இச்சிறப்பு முகாமினை பயன்படுத்தி, ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள குழந்தைகள் தவிர்த்து அனைத்து உறுப்பினர்களும் தங்களின் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று தங்களது விரல் ரேகையைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு நடவடிக்கையின் மூலம் போலி ரேஷன் அட்டைகள் முழுமையாக ஒழிக்கப்பட்டு, தகுதியான நபர்களுக்குத் தடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.