📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 18, 2026 08:03 AM

ரூ.1 லட்சம் வரை பயிர் கடன் பெற்றவர்களுக்கு ரூ.75,000 தள்ளுபடி முதல்வர் விஜய் அறிவிப்பு

ரூ.1 லட்சம் வரை பயிர் கடன் பெற்றவர்களுக்கு ரூ.75,000 தள்ளுபடி முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை, ஆக. 18---

''தமிழகத்தில், 75,000 முதல், 1 லட்சம் ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு, 75,000 ரூபாயும், 1 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு, 35,000 ரூபாயும் தள்ளுபடி செய்யப்படும்,'' என, முதல்வர் விஜய் அறிவித்தார்.

சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்பு:

பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில், த.வெ.க., அரசு பொறுப்பேற்றது. ஆனாலும், பதவியேற்ற 15 நாட்களுக்குள், 50,000 ரூபாய் வரையிலான, பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டன.

பாதுகாப்பது அவசியம்

அதைத்தொடர்ந்து, விவசாய சங்கங்களின் கோரிக்கையை பரிசீலித்து, நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை மட்டும் கருத்தில் கொண்டு, 75,000 ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு முழுத்தொகையும், 75,000 ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு, 35,000 ரூபாயும் தள்ளுபடி செய்யப்பட்டது.

மொத்தம், 14.44 லட்சம் விவசாயிகளின், 5,932.23 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில், கடந்த ஜூலை 31 வரை, 13.34 லட்சம் விவசாயிகளின் கணக்கில், 5,267 கோடி ரூபாய் வரவு வைக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், பயிர்க்கடன் தள்ளுபடியை அதிகரிக்க வேண்டும் என்று விவசாய அமைப்புகள் கோரின.

இதுகுறித்து, கடந்த 7ம் தேதி, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், மூத்த அமைச்சர்கள், துறைச்செயலர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் விரிவாகப் பரிசீலிக்கப் பட்டது.

கடந்த காலங்களில், பயிர்க் கடன்கள் தள்ளுபடிக்காக, கூட்டுறவு வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய தொகை, 4 முதல் 5 ஆண்டுகளில் செலுத்தப்பட்டது. 2021ல் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை, 2026 வரை, 12 தவணைகளாக கூட்டுறவு வங்கிகளுக்குச் செலுத்தப்பட்டது.

இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத் தொகையையும், 45 முதல் 60 நாட்களுக்குள் கூட்டுறவு வங்கிகளுக்கு முழுமையாக செலுத்த வேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூடுதல் தள்ளுபடி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு, 100 சதவீதமும்; 75,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை பெற்றவர்களுக்கு, அதிகபட்சமாக 75,000 ரூபாய் வரையும், 1 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு, 35,000 ரூபாயும் தள்ளுபடி வழங்கப்படும்.

அதாவது, 75,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள, 2 லட்சத்து, 38,264 விவசாயிகளுக்கு, தலா, 75,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படும்.

இதனால், ஏற்கனவே, பெற்ற தள்ளுபடி தொகைக்கு மேலாக, 40,000 ரூபாய் வரை கூடுதல் தள்ளுபடி பெறும் வாய்ப்பு ஏற்படும். அரசுக்கு 953.06 கோடி ரூபாய் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். மொத்தம் 13.34 லட்சம் விவசாயிகளுக்கு, 6,220 கோடி ரூபாய் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

3வது முறையாக தள்ளுபடி த.வெ.க., ஆட்சிக்கு வந்த பின், மே 25, ஜூன் 19ம் தேதிகளில், மொத்தம் 5,932.23 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மூன்றாம் முறையாக நேற்று, 953.06 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.