Business
August 18, 2026 09:04 AM
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு
சென்னை: தமிழகத்தில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு, 400 ரூபாய் உயர்ந்தது.
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,220 ரூபாய்க்கும், சவரன், 1,13,760 ரூபாய்க்கும் விற்பனை யானது.
வெள்ளி கிராம், 255 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தங்கச் சந்தைக்கு விடுமுறை. அன்று முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் உயர்ந்து, 14,270 ரூபாய்க்கும், சவரனுக்கு, 400 ரூபாய் அதிகரித்து, 1,14,160 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
தொடர்புடைய செய்திகள்
Business