‘ஸ்டாலின் ஆட்சி நல்லாயிருந்துச்சா?’
சென்னை வில்லிவாக்கத்தில் சமீபத்தில் நடந்த அ.தி.மு.க., பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு விழாவில், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி கலந்து கொண்டார்.
பின் அவர் அளித்த பேட்டியில், ‘இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் படு மோசமான ஆட்சி நடக்கிறது. இந்த ஆறு மாத காலம், தமிழகத்தில் த.வெ.க.,வின் மிக மோசமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. விஜய் முதல்வர் ஆன பிறகு, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது.
‘கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் பிரச்னைகள் நடக்காத நாளில்லை. இவற்றை கட்டுப்படுத்த திராணியற்ற அரசாக, த.வெ.க., அரசு உள்ளது’ என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், ‘விஜய் வந்த பிறகு சட்டம் – ஒழுங்கு கெட்டு போயிடுச்சுன்னா, அதுக்கு முன்னாடி இருந்த ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு நல்லா இருந்துச்சுன்னு சொல்றாரா?’ என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.