கூட்டுறவு சங்கங்கள் மதுக்கடைகளை நடத்த அனுமதி வழங்குவது ஆபத்தானது: அன்புமணி ராமதாஸ்
கூட்டுறவு சங்கங்கள் மதுக்கடைகளை நடத்த அனுமதி வழங்குவது ஆபத்தானது என்றும் தனியார்மயம், மது வணிகம் அதிகரிக்கவும் வழி வகுக்கக்கூடாது என்பது குறித்தும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் முடிவு ஆபத்தானது
தமிழ்நாட்டில் சில்லரை மது வணிகத்தை டாஸ்மாக் நிறுவனம் மட்டுமின்றி, கூட்டுறவு சங்கங்களும் நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கூட்டுறவு சங்கங்கள் விரும்பினால் டாஸ்மாக் நிறுவனத்திடம் அனுமதி பெற்று தேவைக்கு ஏற்ப மதுக்கடைகளை திறந்து கொள்ளலாம்; அவ்வாறு திறக்கப்படும் மதுக்கடைகளின் விவரங்களை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு ஆபத்தானது.
மதுரைக் கிளையின் தீர்ப்பு
மது அத்தியாவசியமான பொருள் அல்ல. தமிழ்நாட்டில் தேவைக்கும் அதிகமாகவே மதுக்கடைகள் உள்ளன என்பதால், புதிய மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்று சில நாள்களுக்கு முன்பு தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பளித்திருந்தது. அதற்குள்ளாக கூட்டுறவு சங்கங்களும் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டிய தேவை என்ன?
சட்ட விரோதமாக மது வணிகம்
மதுவுக்கு அடிமை
பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம்- மதுக்கடை குறைப்பு
தமிழ்நாட்டில் ஒரு கட்டத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கை 8 ஆயிரத்திற்கும் கூடுதலாக இருந்தது. கடந்த 20 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய சட்டப் போராட்டம் மற்றும் அரசியல் போராட்டத்தால் தான் அவற்றின் எண்ணிக்கை இப்போது 4048 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மதுக்கடை வணிக நேரமும் 16 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக முழு மதுவிலக்கை நோக்கித் தான் அரசு பயணிக்க வேண்டுமே தவிர மது வணிகத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்படக் கூடாது.
எனவே, கூட்டுறவு சங்கங்கள் மூலம் மதுக்கடைகளை நடத்த அனுமதிக்கும் அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். மாறாக, தமிழ்நாட்டில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து, முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான கால அட்டவணையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.