📅 Saturday, 22 August 2026 IST | ஆவணி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 20, 2026 09:01 PM

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா? அதிரடி காட்டிய அமைச்சர் விக்னேஷ்!

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா? அதிரடி காட்டிய அமைச்சர் விக்னேஷ்!

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா? அதிரடி காட்டிய அமைச்சர் விக்னேஷ்!

தமிழகத்தில் பள்ளி கல்லுரிகள் மற்றும் வழிப்பாட்டுத தலங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூடிவிட்டதாக அமைச்சர் விக்னேஷ் கூறியிருந்த நிலையில் அதற்கான ஆதாரத்தை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முதற்கட்டமாக மக்கள் நடமாட்டம் அதிக உள்ள பகுதிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிப்பாட்டுத் தலங்களின் அருகே இயங்கி வரும் 717 டாஸ்மாக் கடைகளை மூடப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். மேலும் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலை தடுக்க அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.

அந்த அறிவிப்பின் படி 717 கடைகளும் மூடிவிட்டதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்து, அதற்கான பட்டியலையும் மாவட்ட ரீதியாக வழங்கிய இருந்தனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் தொடர்ந்து மூடியதற்கான உண்மையான ஆதாரத்தை காட்டுங்கள் என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடரில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதற்கான முழு ஆதாரங்களையும் இன்று மாலை வெளியிடுவதாக அறிவித்திருந்தார்.

இதனிடையே 717 கடைகளும் முழுமையாக மூடப்பட்டு, அவற்றின் எண்கள் மற்றும் முகவரிகள் அடங்கிய பட்டியலை டாஸ்மாக் நிர்வாகம் சமூக ஊடகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிட்டன.

இது குறித்து அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், முதலமைச்சர் உத்தரவின் படி 717 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன என்றும் குறிப்பாக கோயம்பத்தூர் மாவட்டத்தில் தான் மிக அதிகமான கடைகள் அகற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். மேலும் மக்கள் நலனே முக்கியம் என்பதால், அதிக வருவாய் ஈட்டித் தந்த முக்கியமான கடைகளும் இதில் மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால், எஞ்சிய சில கடைகளில் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. எனினும், பொதுமக்கள் மற்றும் குடும்பங்களின் நலனே நமது முதலமைச்சரின் ஒரே நோக்கம்.

இந்த நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போட நினைப்பவர்கள் அல்லது அரசுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்க முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்.

மேலும், டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதைத் தடுக்க அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார்.