டாஸ்மாக் புகார்கள் மற்றும் குறைகள்: கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை மையம்
டாஸ்மாக் புகார்கள் மற்றும் குறைகள்: கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை மையம்
சென்னை: டாஸ்மாக் தொடர்பான பொதுமக்கள், நுகர்வோர்களின் புகார்கள் மற்றும் குறைகளை கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத் தளங்கள் மூலம் தெரிவிக்கலாம் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சேவை மையம் நேற்று(31-08-2026) முதல் செயல்பாட்டில் உள்ளது.
இது தொடர்பான அறிக்கையில்;
டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான பொதுமக்கள்/நுகர்வோர்கள் தங்களது புகார்கள், குறைகள் மற்றும் இதர பிரச்சினைகளை எளிதாகத் தெரிவிக்கும் வகையில், டாஸ்மாக் கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை மையம் 31.08.2026 முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பொதுமக்கள்/நுகர்வோர்கள் தங்களது புகார்கள், குறைகள் மற்றும் விசாரணைகளைத் தெரிவிப்பதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800-889-2015 அதிகாரப்பூர்வ WhatsApp எண் +91-7397720230 ஆகியவற்றைத் தொடர்புகொள்ளலாம். கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை மையம் 24 மணி நேரமும் (24 X7) பொதுமக்கள்/நுகர்வோர்களிடமிருந்து புகார்கள் மற்றும் தொடர்புகளைப் பெறும்.
மேலும், டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகளை பின்வரும் இணைப்புகள் மூலம் அணுகலாம்:
மேற்கண்ட கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை, WhatsApp மற்றும் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத் தளங்கள் மூலம் பொதுமக்கள்/நுகர்வோர்கள் தங்களது புகார்கள் மற்றும் குறைகளை டாஸ்மாக் நிறுவனத்திடம் எளிதாகத் தெரிவிக்க இயலும். அவ்வாறு பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை மற்றும் தீர்வு காணும் வகையில் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.