📅 Sunday, 09 August 2026 IST | ஆடி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news August 08, 2026 05:34 PM

தாம்பத்தியத்துக்கு அழைத்த கணவன்.. ரீல்ஸ் பார்த்துக்கொண்டிருந்த மனைவி..அடுத்த நடந்த திகில் சம்பவம்

தாம்பத்தியத்துக்கு அழைத்த கணவன்.. ரீல்ஸ் பார்த்துக்கொண்டிருந்த மனைவி..அடுத்த நடந்த திகில் சம்பவம்

கும்பலகோடு,

பெங்களூரு அருகே இளம்பெண் கொலையில் கணவர் கைது செய்யப்பட்டார். தாம்பத்தியத்துக்கு மறுத்து ரீல்ஸ் வீடியோ பார்த்ததுடன், உணவும் சமைத்து கொடுக்காததால் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.

தொழிற்சாலையில் வேலை

கடந்த மாதம் (ஜூலை) 29-ந்தேதி ரீமாகுமாரி பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் கொலை செய்யப்பட்டு இருந்தார். அவரது உடலை போர்வையால் சுற்றி வைத்துவிட்டு தீரஜ்குமார் தப்பி ஒடிஇருந்தார். இதுகுறித்து கும்பலகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீரஜ்குமாரை தேடிவந்தனர்.

ரீல்ஸ் வீடியோ பார்ப்பதில் ஆர்வம்

இந்த நிலையில், பீகாரில் தலைமறைவாக இருந்த தீரஜ்குமார் கைது செய்யப்பட்டார். அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரித்ததில் பரபரப்பு தகவல்கள் வெளி யாகி உள்ளது.

ரீமாகுமாரியை தீரஜ்குமார் உயிருக்கு உயிராக காதலித்துள் ளார். இதனால் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி ரீமாகுமாரியை பெங்களூருவுக்கு அழைத்து வந்து திருமணம் செய்திருந்தார். ஆனால் திருமணத்துக்கு பின்பு ரீமாகுமாரியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அதாவது கணவர் தீரஜ்குமாரிடம் பேசாமல் எப்போதும் செல்போனில் ரீல்ஸ் வீடியோ பார்ப்பதில் மட்டுமே ரீமாகுமாரி ஆர்வம் காட்டி வந்துள்ளார்.

குறிப்பாக தீரஜ்குமாருடன் தாம்பத்தியத்தில் ஈடுபட ரீமாகுமாரி மறுத்துள்ளார். அத்துடன் தனக்கு மட்டுமே உணவு சமைத்து ரீமாகுமாரி சாப்பிட்டுள்ளார். கணவருக்கு எந்த உணவும் சமைத்து கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இந்த விவகாரங்கள் தொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பெங்களூரு வேண்டாம். பீகாருக்கே சென்று விடலாம் என ரீமாகுமாரி கூறி தகராறு செய்து வந்துள்ளார்.

ஓட்டலில் வாங்கி சாப்பிடும்படி...

இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி இரவு வேலைக்கு சென்று வந்த தீரஜ்குமார் சாப் பிட உணவு கேட்டுள்ளார். தான் சமைக்கவில்லை என்றும், ஓட்டலில் வாங்கி சாப்பிடும்படி யும் ரீமாகுமாரி கூறியுள்ளார். அதன்பிறகு. தாம்பத்தியத்தில் ஈடுபட தீரஜ்குமார் அழைத்துள் ளார். இதனை ரீமாகுமாரி நிராகரித்துள்ளார். இதன்காரணமாக தம்பதி இடையே வாக்குவாதம் உண்டானது.

அப்போது வீட்டில் கிடந்த உருட்டுக்கட்டையால் தீரஜ்குமாரை ரீமாகுமாரி தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீரஜ்குமார் துப்பட்டாவால் ரீமாகுமாரியின் கழுத்தை இறுக்கியும், வாயில் பாலிதீன் பையால் முகத்தை சுற்றியும் கொலை செய்துவிட்டு, உடலை போர்வையால் சுற்றி வைத்துவிட்டு பீகாருக்கு தப்பி சென்றது தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பின் தீரஜ்குமாரை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.