📅 Wednesday, 05 August 2026 IST | ஆடி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news August 05, 2026 05:31 PM

TN BUDGET 2026

TN BUDGET 2026

TN BUDGET 2026-27: அமைச்சரின் உளறல்கள்… வைரலாகும் வீடியோ..!

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27 சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் வாசிக்கும்போது அமைச்சர் உளறிய வார்த்தைகள் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் தற்போது தமிழ்நாட்டின் 2026-2027 ஆம் ஆண்டுக்கான முதல் பட்ஜெட் தாக்கல் இன்று நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட் தாக்கல் 2.30 மணிநேரம் வரை நீடித்தது. மதியம் 12.30 மணிக்கு பட்ஜெட் உரையை முடித்தார்.

தவெக அரசு தமிழகத்தில் ஆட்சியை பிடித்த பிறகு முதல்வர் விஜய் தலைமையில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் இது என்பதால் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நிதி நிலை அறிக்கையை வாசிக்கும்போது அமைச்சர் மரியா வில்சன் உளறிய வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் மீம் மெட்டீரியலாக மாறி இருக்கிறது.

அமைச்சர் நிதி நிலை அறிக்கை வாசிக்கும்போது 'குறியீடுகளை' என்று சொல்வதற்கு பதிலாக "குருவிடுகளை"என்றும்,

'அனைவர்க்கும் சம வாய்ப்பினை' என்பதற்கு பதிலாக "சவ வாய்ப்பினை" என்றும்,

'தேவையான சமூக பொருளாதார' என்பதற்கு பதிலாக "தேவயானி" என்றும்,

'வட்டி செலுத்துவதற்கான' என்பதற்கு பதிலாக "வட்டி செல்வத்திற்கான" என்றும்,

"இக்கட்டான சூழ்நிலையில்' என்பதற்கு பதிலாக "ஷு நைல்" என்றும்,

'நமது அரசு ஆட்சி அமைத்தவுடன்' என்பதற்கு பதிலாக "அரசு ஆச்சி" என்றும்,

'நிர்வகித்து வருகிறது' என்பதற்கு பதிலாக "நிர்வ கத்தி வருகிறது" என்றும்,

'கௌரவிப்பவர்' என்பதற்கு பதிலாக 'கௌரி விப்பர்' என்றும்,

'பல்வேறு விதிமுறைகள்' என்பதற்கு பதிலாக "பல்வேது விதிமுறைகள்" என்றும்,

'பல அடுக்கு மற்றும் உயரமான கட்டிடங்கள்' என்பதற்கு பதிலாக "பல அடக்கு" என்றும்,

'தினந்தோறும்' என்பதற்கு பதிலாக "நிதந்தோறும்" என்றும்,

'மனித வள முதலீடுகளை' என்பதற்கு பதிலாக "மனித வெல முதலீடுகளை" என்றும்,

'தமிழ்நாடு' என்பதற்கு பதிலாக "தமிழ்நாட்ரு" என்றும்,

'இந்த திட்டத்திற்காக' என்பதற்கு பதிலாக "இந்தி திட்டத்திற்காக" என்றும் உளறியுள்ளார்.

இதுமட்டுமின்றி, இடையில் "வரலக்ஷ்மியுடன் இணைந்து" என்றும் , "கண்காணிப்ப முனிமான" என்றும் சம்மந்தமே இல்லாமல் உளறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை பலவிதமாக எடிட் செய்து தவெகவினரை டேக் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.