📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 15, 2026 05:03 AM

'திமுக

'திமுக

சென்னை: ''தி.மு.க., - பா.ஜ., இடையே, முன்பு மறைமுக கூட்டணி இருந்தது; இப்போது நேரடி கூட்டணி உருவாகியுள்ளது,'' என, மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

அவர் அளித்த பேட்டி: காவிரி விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது, உச்ச நீதிமன்றத்தில், வரும் திங்கள்கிழமை விசாரணை நடைபெறுகிறது.

விவசாயிகள் பிரச்னை தொடர்பாக போராட்டம் நடத்தியது பழனிசாமி அ.தி.மு.க.,வா; அல்லது மற்றொரு குழுவின் அ.தி.மு.க.,வா என தெரியவில்லை.

தி.மு.க., - பா.ஜ., இடையே மறைமுக கூட்டணி இருந்தது; இப்போது, அடுத்தகட்டத்திற்கு நகர்ந்து விட்டனர். தி.மு.க., - பா.ஜ., இடையே, நேரடி கூட்டணி உருவாகியுள்ளது. 'தி.மு.க., - எம்.பி., சிவா, விரைவில் மத்திய அமைச்சர் ஆவார்' என, தி.மு.க., முன்னாள் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் கூறினார்.

'அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நண்பரும் இல்லை' என, பா.ஜ., நிர்வாகி வானதி கூறுகிறார். குடும்ப சொத்துக்களை காப்பாற்ற, நேரடியாக கூட்டணி வைக்க தி.மு.க.,வினர் தயாராகி விட்டனர். அதனால் தான், 'பார்லிமென்டில், தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து ஓட்டளிப்போம்' என, இதுவரை தி.மு.க., கூறவில்லை.

'லோக்சபா சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை. பார்லிமென்டில் இருக்கை மாற்றம் தொடர்பாக மனு அளிக்கவே சென்றேன்' என, தி.மு.க., - எம்.பி., கனிமொழி கூறுகிறார். அப்படி என்றால், அங்கு தேநீர் விருந்து நடந்தது கனிமொழிக்கு தெரியாதா; இருக்கை மாற்றும் கோரிக்கை மனுவை, பார்லிமென்ட் கூட்டத்தின் கடைசி நாளில் தான் தெரிவிக்க வேண்டுமா?

முந்தைய தி.மு.க., ஆட்சியில் கட்சி நிதி, குடும்பத்தினருடன் ஒப்பந்தம் என, பல சிக்கல்கள் இருந்தன.தற்போது, எந்த பிரச்னையும் இல்லாததால், த.வெ.க., அரசு அமைந்த பின், தொழில் முதலீட்டாளர்கள் தமிழகத்தை தேடி வருகின்றனர்.

கோவையில், தனியார் கல்லுாரி மாணவர்களிடையே ஏற்பட்ட ஜூனியர், சீனியர் மோதல் காரணமாகவே கொலை நடந்துள்ளது. சென்னையில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை; சொத்துக்களை மறுமதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

அரசை கண்டித்து, எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினால், அதற்கான தீர்வை பேசுவதை விட்டு, பழனிசாமி அ.தி.மு.க.,வா அல்லது மற்றொரு குழுவின் அ.தி.மு.க.,வா என, அமைச்சர் நிர்மல்குமார் பேசியது, அவரது அனுபவமற்ற அரசியலை காட்டுகிறது. எங்கள் கட்சியை பற்றி அவர் கவலைப்பட தேவையில்லை; நாங்கள் பார்த்து கொள்வோம். மின் கட்டணம் அதிகமானது பற்றி கேட்டால், 'அடுத்த மாதம் சரி செய்து கொள்ளலாம்' என, கடன்காரர்கள் கூறுவதுபோல் பேசுகிறார். அவரை எல்லாம் அமைச்சராக்கியது வெட்கக்கேடு. எங்கு பதவி, வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கு செல்பவர், அவர். எங்கள் கட்சியிலும் இருந்தார். பா.ஜ.,விலும் இருந்தார். பொதுச்செயலர் பழனிசாமியை, வேலுமணி, விஸ்வநாதன் போன்றோர் பொதுவெளியில் விமர்சிப்பதால் தான், இதுபோல சிலர் பேசுகிறார்கள். - முனுசாமி, துணை பொதுச்செயலர், அ.தி.மு.க.,