📅 Friday, 27 November 2026 IST | கார்த்திகை 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu November 27, 2026 10:32 AM

திருச்சி மாநகர், புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை

திருச்சி மாநகர், புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை

திருச்சி மாநகர், புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை

திருச்சி, நவ.27: திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 3 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் வரும் 27ம்தேதி வரை தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மிதமான மழையும் பிற மாவட்டங்களில் கனமழையும் செய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதையடுத்து தமிழகத்தில் கனமழை நீடித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக மேகமூட்டம் திரண்டு அவ்வப்போது மழை பெய்து வந்தது.

இந்நிலையில் நேற்று காலையில் இருந்தே மேகம் மப்பும் மந்தாரமுமாக கணப்பட்டது. பிற்பகல் 12 மணியளவில் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழை பெய்தது. மதியம் 1 மணியளவில் கனமழை நீடித்தது. இந்த மழை இடைவிடாமல் 3 மணிநேரம் வெளுத்து வாங்கியது. பின்னர் தொடர்ந்து சாரல் மழையாக நீடித்தது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம், தில்லை நகர், உறையூர், கண்டோண்மென்ட், மார்கெட், சுப்ரமணியபுரம் போன்ற நகரின் பல்வேறு பகுதிகளில் பகல் 12 மணியில் இருந்து பரவலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலையில் வெள்ளம்போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் சூழல் உருவானது.