📅 Friday, 27 November 2026 IST | கார்த்திகை 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News November 27, 2026 12:32 PM

“நியூசிலாந்து டெஸ்ட்டில் சிராஜ் ஒழுங்காவே பந்து வீசலை ”.. அஸ்வின் போட்ட போடு.. நையாண்டி விமர்சனம்

“நியூசிலாந்து டெஸ்ட்டில் சிராஜ் ஒழுங்காவே பந்து வீசலை ”.. அஸ்வின் போட்ட போடு.. நையாண்டி விமர்சனம்

“நியூசிலாந்து டெஸ்ட்டில் சிராஜ் ஒழுங்காவே பந்து வீசலை ”.. அஸ்வின் போட்ட போடு.. நையாண்டி விமர்சனம்

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பிளேயிங் 11இல் சேர்க்கப்படவில்லை. இதை முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கிண்டலாக விமர்சித்துள்ளார். சிராஜின் ஃபார்ம் சரியில்லை எனக் கூறி அவரை ஓரம் கட்டிய அணி நிர்வாகத்தின் காரணங்களை கிண்டலடித்து அஸ்வின் பதிவிட்டுள்ள கருத்து இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது.

தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அஸ்வின், "இன்று ஆகாஷ் தீப் பந்துவீசிய விதம் பேட்டர்களால் தொட முடியாத அளவுக்கு அபாரமாக இருந்தது. ஆனால் சிராஜ் தனது பந்துவீச்சு திறனை முழுமையாக இழந்துவிட்டது போல் தெரிகிறது. அவர் தீவிரமாக பயிற்சி செய்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடருக்குள் மீண்டும் அணிக்குள் வர முயற்சிப்பார் என நம்புவோம்" என்று மறைமுகமாக சாடியுள்ளார்.

அதாவது நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சிராஜ் ஒழுங்காக விளையாடவில்லை என அஸ்வின் குறிப்பிட்டார் ஆனால், சிராஜ் பிளேயிங் 11-இலேயே இல்லை. இந்த பிட்ச்சில் ஆகாஷ் தீப் பந்தை ஸ்விங் செய்து விக்கெட்களை சாய்க்கும் நிலையில், அதை மிகவும் சிறப்பாக செய்யக் கூடிய சிராஜை ஆட வைத்திருக்க வேண்டும். ஆனால், அவரை ஆட வைக்கவில்லை. இப்படி வேகப் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளங்களில் சிராஜை ஆட வைக்காமல், அவர் நன்றாக பந்து வீசவில்லை என கூறும் அணி நிர்வாகத்தின் தவறான வாதத்தை வெளிச்சம் போட்டுக் காட்டவே அஸ்வின் இந்த நையாண்டி வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்தியாவுக்காக அதிகபட்சமாக 43 விக்கெட்டுகளை வீழ்த்திய முதன்மை பந்துவீச்சாளர் சிராஜ்தான். ஒட்டுமொத்தமாக 48 டெஸ்டுகளில் 144 விக்கெட்டுகளை அவர் சாய்த்துள்ளார். நியூசிலாந்து தொடரின் முதல் டெஸ்டில் அவரை வெளியே உட்கார வைத்த நிர்வாகம், பந்துவீச்சுக்கு சாதகமான கிறைஸ்ட்சர்ச்சிலும் அவரை சேர்க்கவில்லை. பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக அறிமுக வீரர் குர்னூர் ப்ரார் சேர்க்கப்பட்ட போதும், சிராஜ் மீண்டும் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 110 ரன்னில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளாக சரிந்தது. பின்னர் டேரில் மிட்செல் மற்றும் டாம் பிளண்டல் இணை பொறுப்புடன் ஆடினர். மிட்செல் ஆட்டமிழந்த பின் வந்த கிளென் பிலிப்ஸ் தன் பங்கிற்கு ரன் சேர்த்தார்.