திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாத தமிழக அரசு: மதுரையில் வழக்கறிஞர்கள் போராட்டம்
மதுரை: கார்த்திகை திருநாளில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனாலும், திமுக பாணியில் செயல்பட்ட விஜய் அரசு, தீபம் ஏற்றவில்லை. தமிழக அரசை கண்டித்து ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. நீதிமன்றத்திலும் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐகோர்ட் மதுரைக்கிளை முன்பு ஹிந்து சங் பரிவார் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், '' உச்சநீதிமன்றத்தின் உத்தரவை புறக்கணிக்கும் துணிச்சலை மாநில அரசு கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. உச்சநீதிமன்றமே இந்தியாவின் மிக உயர்ந்த நீதிமன்றமாகும். சட்டப்படியும், அரசியலமைப்பின்படியும் அமைக்கப்பட்ட எந்தவொரு அரசும் அதன் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டிய கடமை உள்ளது. அவ்வாறு கீழ்ப்படிய மறுப்பது நீதிமன்ற அவமதிப்பு. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை புறக்கணிக்க துணியும் ஒரு அரசால், எத்தகைய அராஜக சூழல் உருவாகக்கூடும் என்பதை இது தெளிவாக காட்டுகிறது. இதற்கு பொறுப்பானவர்கள் விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும் என்றார்.