📅 Saturday, 01 August 2026 IST | ஆடி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 01, 2026 04:31 PM

தலைவர் டூ மா.செ.. திமுகவில் நடக்கப்போகும் பெரிய மாற்றங்கள்..!

தலைவர் டூ மா.செ.. திமுகவில் நடக்கப்போகும் பெரிய மாற்றங்கள்..!

தலைவர் டூ மா.செ.. திமுகவில் நடக்கப்போகும் பெரிய மாற்றங்கள்..!

திமுகவில் அமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு அதிரடி மாற்றங்களுக்கு கழகம் ரெடியாகிக் கொண்டிருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, நிர்வாக ரீதியான மாற்றங்களுக்கும், அமைப்பை முழுவதுமாக மாற்றவும் திமுக தலைமை தயாராகிக் கொண்டிருக்கிறது. இடைத்தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் தோல்விக் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்த தலைமை, அதன் ரிப்போர்ட்டுகளை ஆராய்ந்து, மாற்றங்களை செய்ய பெரிய பிளானையே போட்டு வருவதாகவும், இதனால் திமுக சீனியர்களிடையே பதற்றமான சூழல் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

மறுபுறம், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கட்சிப் பொறுப்புகளும் தொடர்ந்து விரிவடைந்து வருகின்றன. அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தை அவர் தலைமையேற்று நடத்தினார். மேலும், ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சையில் நடைபெறவுள்ள திமுக ஆர்ப்பாட்டத்திற்கும் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகிப்பார் என்று கட்சி அறிவித்துள்ளது. இதனால், கட்சியின் முக்கிய அரசியல் நடவடிக்கைகளில் அவருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருவதாக கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசப்படுகிறது. குறிப்பாக, உதயநிதியை செயல் தலைவராக்கி, இளைஞர்களை கழகத்திற்குள் இழுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஸ்டாலின் தனது உடல் நிலையை காரணம் காட்டி சிறிது காலம் ஓய்வெடுக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, திமுகவில் நடைபெறவுள்ள மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து மாற்றப்படவுள்ள சிலருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனிமொழிக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என்ற பேச்சு முன்பே எழுந்திருந்தாலும், தற்போதைய பொதுச்செயலாளர் துரைமுருகன் அந்தப் பதவியை விட்டு விலக விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும், அவருக்கு எதிராக எந்தவித அழுத்தத்தையும் உருவாக்க கனிமொழி தரப்பும் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. மாறாக, முதன்மை துணைப் பொதுச் செயலாளர் பதவியை கொடுத்து, அதிகாரங்களை பகிர தலைமை முடிவெடுத்துள்ளதாம்.

இதன் தொடர்ச்சியாக, திமுக நிர்வாகத்தில் மேலும் சில முக்கிய மாற்றங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. இருப்பினும், இந்த தகவல்கள் குறித்து திமுக தலைமையிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.