📅 Sunday, 02 August 2026 IST | ஆடி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion August 01, 2026 05:31 PM

ஊர் நடுவே 50 சவுக்கடி தண்டனை.. சிவனாண்டி

ஊர் நடுவே 50 சவுக்கடி தண்டனை.. சிவனாண்டி

சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில் ரேவதி, கார்த்திக்காக விதவிதமான உணவுகளை சமைத்து வீட்டுக்கு கொண்டு வருகிறாள். ரேவதி சமைத்த உணவுகளை கார்த்திக் ருசித்து மகிழ, இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்து, சந்தோஷமாக பல விஷயத்தை பேசுகின்றனர். இந்த நெருக்கம் இருவருக்குமிடையேயான காதலை மேலும் வலுப்படுத்துகிறது.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், அம்மனுக்கு நகைகளை போட்டு பூஜை நடக்கக்கூடாது என திட்டம் போட்ட சிவனாண்டி மற்றும் முத்துவேல் இருவரும் கோவில் நகைகளை கொள்ளையடித்து, அதை மாறுவேடத்தில் வந்த மயில்வாகனத்திடம் ஒப்படைத்து பணத்தை பெற்றுக்கொள்கிறார்கள். கார்த்திக் சொன்ன திட்டத்தின் படியே அனைத்தும் நடக்கிறது. இந்த விஷயத்தை மயில் கார்த்தியிடம் போனில் சொல்கிறார். பணத்தை வாங்கிக்கொண்டு எல்லாம் திட்டமிட்டபடி முடிந்துவிட்டதாக சிவனாண்டி நினைக்கும் நேரத்தில், எதிர்பாராத அதிர்ச்சி காத்திருக்கிறது. மறுநாள் கோவிலில் நகைகள் காணாமல் போனது தெரிய வர, ஊரே பரபரப்பாகிறது. இந்த விவகாரத்தில் கார்த்திக் களமிறங்கி, அனைவரின் முன்னிலையிலும் ஒரு முக்கியமான வீடியோ ஆதாரத்தை வெளியிடுகிறார். அந்த வீடியோவில் சிவனாண்டி மற்றும் முத்துவேல் இணைந்து கோவில் நகைகளை திருடும் காட்சி தெளிவாக பதிவாகியிருப்பதை பார்த்து ஊர்மக்கள் அதிர்ச்சியில் அடைகின்றனர்.

அவமானத்தால் தலைகுனிந்த சிவனாண்டி: உண்மை வெளிச்சத்திற்கு வந்ததும், கோபமடைந்த ஊர்மக்கள் இருவருக்கும் 50 சவுக்கடி தண்டனை கொடுக்க முடிவு செய்கிறார்கள். கார்த்திக்கால் ஊர் மக்கள் முன் சிவனாண்டி மற்றும் முத்துவேல் இருவரும் அவமானப்பட்டு அதிர்ச்சியில் உறைந்து நிற்கிற்னர். அப்போது தான் மாறுவேடத்தில் இருக்கும் மயில்வாகனம், தனது வேஷத்தை களைத்து நான் தான் மயில்வாகனம் என்ற உண்மையை சொல்ல, இருவருக்கும் மயில்வாகனத்தின் மீது கோவம் வருகிறது. அவமானப்பட்டு நிற்கும் சிவனாண்டி மற்றும் முத்துவேலின் அடுத்த முடிவு என்ன? கார்த்திக்கின் இந்த அதிரடி நடவடிக்கை இன்னும் என்னென்ன திருப்பங்களை ஏற்படுத்தப் போகிறது? பரபரப்பும், அதிரடியும் நிறைந்த இந்த காட்சிகளை காண, இன்று இரவு 9 மணிக்கு உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலை தவறாமல் பாருங்கள்!