📅 Friday, 21 August 2026 IST | ஆவணி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 21, 2026 09:01 PM

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று வெயில் சதமடித்தது

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று வெயில் சதமடித்தது

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் 5 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:-

திருச்சி - 103.1° பாரன்ஹீட் (39.5° செல்சியஸ்)

மதுரை விமான நிலையம் - 102.92° பாரன்ஹீட் (39.4° செல்சியஸ்)

ஈரோடு - 101.12° பாரன்ஹீட் (38.4° செல்சியஸ்)

வேலூர் - 100.94° பாரன்ஹீட் (38.3° செல்சியஸ்)

மதுரை நகர் - 100.76° பாரன்ஹீட் (38.2° செல்சியஸ்)