📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 02, 2026 10:00 PM

தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ராமச்சந்திரன் நியமனம்!

தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ராமச்சந்திரன் நியமனம்!

அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் மாணவர் அணிச் செயலாளராகப் பணியாற்றிய சிங்கை ராமச்சந்திரன், அக்கட்சியின் சார்பில் 2024 மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்டார்.

கடந்த ஜூலை மாதம் அதிமுகவிலிருந்து விலகிய இவர், கடந்த மாதம் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு அவருக்கு இந்தப் பொறுப்பை வழங்கியுள்ளது. இவரது தந்தை சிங்கை கோவிந்தராசும் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆவார்.

ராமநாதன் பதவி விலகல்

கடந்த ஜூன் மாதம் ஸ்டார்ட்அப்டிஎன் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பதவிகளிலிருந்து சிவராஜ ராமநாதன் ராஜினாமா செய்தார்.

இவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட தவெக தலைமையிலான அரசு தொழில்துறை ஆணையரும், தொழில்கள் மற்றும் வர்த்தகத் துறை இயக்குநருமான எல். நிர்மல் ராஜூக்கு இந்தப் பொறுப்பை கூடுதலாக வழங்கியது.

இந்நிலையில் அண்மையில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.