📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 30, 2026 09:04 AM

 தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைவு

 தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைவு

சென்னை: தமிழகத்தில் நேற்று, ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 2,360 ரூபாய் குறைந்தது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 14,800 ரூபாய்க்கும், சவரன் 1,18,400 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 265 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

தங்கம் விலை நேற்று கிராமுக்கு 295 ரூபாய் குறைந்து, 14,505 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 2,360 ரூபாய் சரிவடைந்து, 1,16,040 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 260 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.60 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.