📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 02, 2026 03:03 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,680 குறைவு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,680 குறைவு

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.1) காலையில் பவுனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில், மாலையில் பவுனுக்கு ரூ.1,680 குறைந்தது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.14,175-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்க விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,080 என குறைந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய விலை விவரம்

இந்தச் சூழலில் சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,385-க்கும் விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,15,080-க்கும் விற்பனையாகிறது.

காலையில் சற்று விலை உயர்ந்த நிலையில், மாலையில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,680-ம், கிராமுக்கு ரூ.195-ம் குறைந்தது. இதன் காரணமாக ஒரு கிராம் தங்கம் ரூ.14,175-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.1,13,400-க்கும் விற்பனையாகிறது.

24 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.213 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,464-க்கு விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.195 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,945-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று காலையில் கிராம் ஒன்றுக்கு ரூ.5 குறைந்த நிலையில், மாலையில் மேலும் ரூ.5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.