📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 02, 2026 03:04 AM

உலக ஆபத்துகளைக் கடந்து சிங்கப்பூர் சிறப்படையும் என நிபுணர்கள் கணிப்பு

உலக ஆபத்துகளைக் கடந்து சிங்கப்பூர் சிறப்படையும் என நிபுணர்கள் கணிப்பு

உலகளாவிய வர்த்தகம் வளர்ச்சிகண்டு வருவதால் அமெரிக்க வரி, போர் போன்ற ஆபத்துகளைக் கடந்து சிங்கப்பூர் சிறப்புப்பெற இயலும் என்று பொருளியல் பகுப்பாய்வாளர்கள் கணித்துள்ளனர்.

ஆசியா முழுவதும் உள்ள நிறுவனங்கள் தங்கள் விநியோகச் சங்கிலிகளை மறுசீரமைத்து, அவற்றின் மீள்திறனில் முதலீடு செய்வதால் உலக வர்த்தகம் தொடர்ந்து செழிக்கக்கூடும் என்கின்றனர் அவர்கள்.

கடந்த ஆண்டைப் போலவே எதிர்மறை எதிர்பார்ப்புகளைக் கடந்து சரக்கு வர்த்தகம் மீண்டும் வளர்ச்சி காணும் என்றும் சிங்கப்பூர் போன்ற ஏற்றுமதி சார்ந்த ஆசிய நாடுகளுக்குத் தேவையான ஊக்கத்தை அந்த வளர்ச்சி வழங்கும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர்.

உலக வர்த்தகத்தின் அந்த மறுவடிவமைப்பு சில நீடித்த போக்குகளால் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று லண்டனைத் தளமாகக் கொண்ட எச்எஸ்பிசி குறிப்பிட்டுள்ளது.

“எரிசக்திப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் செலவினங்களை விரைவுபடுத்த ஆசிய நிறுவனங்களையும் அரசாங்கங்களையும் புவிசார் அரசியல் பதற்றங்கள் தூண்டுகின்றன.

“தொழில்துறை பேரளவில் சுழற்சி காண அந்தத் தூண்டுதல் வழிவகுக்கும்,” என்று அமெரிக்க முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி கூறுகிறது.