📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 31, 2026 10:04 PM

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவுக்கு பதில் உணவுப்படி: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவுக்கு பதில் உணவுப்படி: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

சென்னை: தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவுக்கு பதிலாக, உணவுப்படி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் அவர் கூறியதாவது:

துாய்மை தொழிலாளர்களை அழைத்து, இரு முறை பேச்சு நடத்தினோம். எக்காரணத்தை முன்னிட்டும், துாய்மைப் பணியாளர்கள், பலப்பிரயோகம் செய்யக்கூடாது என, உத்தரவிட்டுள்ளோம்.

பணியின் போது உயிரிழந்த, துாய்மைப் பணியாளர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும், நடவடிக்கை எடுக்கப்படும்.

துாய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசம், 15 நாட்களுக்கு ஒருமுறை கையுறைகள் வழங்கப்படும். வரும், 15ம் தேதிக்குள், உடை மாற்றும் வசதியுடன், கழிப்பறைகள் கட்டி தரப்படும்.

காலை உணவுக்கு பதிலாக, பணமாக வழங்குமாறு துாய்மைப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதை ஏற்று, உணவுப்படி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.