📅 Wednesday, 25 November 2026 IST | கார்த்திகை 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News November 25, 2026 09:01 PM

துவாஸ் நிலச்சோதனைச் சாவடியில் பிடிபட்ட மோட்டார்சைக்கிளோட்டிகள்

துவாஸ் நிலச்சோதனைச் சாவடியில் பிடிபட்ட மோட்டார்சைக்கிளோட்டிகள்

பல அரசாங்க அமைப்புகள் ஒருங்கிணைந்து நவம்பர் 12ம் தேதி நடத்திய நடவடிக்கைகளில் ஏறத்தாழ 220 மோட்டார்சைக்கிளோட்டிகள் ஜோகூர் நோக்கிச் செல்லும் துவாஸ் நிலச் சோதனைச் சாவடியில் சோதிக்கப்பட்டனர்.

அந்தச் சோதனைகளில் உரிமம், காப்புறுதி போன்றவை இல்லாத 13 மோட்டார்சைக்கிளோட்டிகள் அங்கு பிடிபட்டனர். அந்த 13 நபர்களின் வயது 23 முதல் 50 ஆகும்.

புதன்கிழமை (நவம்பர் 25) அதுகுறித்த ஓர் அறிக்கையில் காவல்துறை விவரங்களை வெளியிட்டது. தேசியச் சுற்றுப்புற அமைப்பு, நிலப் போக்குவரத்து ஆணையம், போக்குவரத்து காவல்துறை ஆகியன அச்சோதனைகளில் பங்கேற்றன.

மோட்டார்சைக்கிள்கள் வெளியிடும் அதிகப்படியான சத்தத்துக்காக தேசியச் சுற்றுப்புற அமைப்பு 84 அழைப்பாணகளை விடுத்துள்ளது. அவ்வாகனங்களின் பதிவெண் தகடுகள் முறையாக பொறுத்தப்படாத 77 குற்றங்களையும் சாலை வரி செலுத்தாமலும் சட்டத்துக்குப் புறம்பாக அமைக்கப்பட்ட புகை வெளியேற்றும் குழாய்களைக் கொண்டிருந்த வாகனங்களையும் நிலப்போக்குவரத்து ஆணையம் கண்டறிந்தது.

உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவது சாலைப் போக்குவரத்துச் சட்டம் 35 (1) பிரிவின்படி குற்றமாகும். காப்புறுதி இன்றி வாகனத்தைப் பயன்படுத்துவது மோட்டார்வாகனங்கள் (மூன்றாம் தரப்பு அபாயம், இழப்பீடு) சட்டம் 1960தின்படி குற்றமாகும்.