காவிரி மேலாண்மை வாரியத்தின் புதிய தலைவராக பியூஷ் சிங் நியமனம்!
தமிழகம், கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண, காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகியவற்றை செயல்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.
தற்போது இந்த ஆணையத்தின் தலைவராக செய்லபட்டு வந்த எஸ்.கே. ஹல்தார் ஓய்வு பெற்று விட்டார். அவருக்கு பதிலாக தற்போது ஆணையத்தின் புதிய தலைவராக பியூஷ் சிங் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
புதிய தலைவர் பியூஷ் சிங் தலைமையில் டில்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று நடைபெற்றது. புதிய தலைவரான அவருக்கு தமிழக நீர்வளத்துறை செயலாளர் பிரசாந்த் வடநரே வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநில கேடரான பியூஷ் சிங், 2000ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி. மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழே இயங்கும் தேசிய நீர் இயக்கத்தின் இயக்குநராக இருந்தார். மத்திய மின்சார அமைச்சக கூடுதல் செயலாளர், டில்லியில் எரிசக்தித்துறை இணை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர்.