📅 Saturday, 28 November 2026 IST | கார்த்திகை 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics November 27, 2026 12:33 AM

தவெக அரசைக் கண்டித்து டிச.,2ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்; இபிஎஸ் அறிவிப்பு

தவெக அரசைக் கண்டித்து டிச.,2ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்; இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: தவெக அரசைக் கண்டித்து டிச.,2ம் தேதி தமிழகம் முழுதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை; முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியின் 6 மாதங்களில், தமிழகத்தை பின்னோக்கி இழுக்கும் வேலையை மட்டுமே இந்த அரசு செய்திருக்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் வாய் திறக்காதது, தமிழகம் முழுதும் கொலை, கொள்ளை, போதைப் பொருள் புழக்கம் எனச் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ள அவல நிலை நிலவி வருகிறது.

கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ, கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது பற்றி நீதிமன்றம் வரை சென்ற பிறகே, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் அளிக்க வந்தவரை துணை சபாநாயகர் தாக்கியுள்ளார். பெண் ஐபிஎஸ் அதிகாரியை இரவில் கோப்புகளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வருமாறு அமைச்சர் கூறியுள்ளதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்எல்ஏ, சொந்தக் கட்சி பெண் நிர்வாகியை கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடையவர் என்று புகார் எழுந்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.

அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் பல மடங்கு உயர்ந்துள்ளது. மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசு, எந்தவித நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

மக்கள் விரோத தவெக ரீல்ஸ் மாடல் ஆட்சியாளர்களின் முகத்திரையை கிழிக்கும் வகையிலும், மக்கள் விரோத, ஜனநாயக விரோத ஆட்சியை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தும் வகையில், அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். 85 மாவட்டங்களின் சார்பில் டிச.,2ம் தேதி காலை 10 மணிக்கு தவெக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு வீடியோ!

டிசம்பர் 2ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் எதற்கு தெரியுமா?

வீடியோ பார்க்க இங்கே ஒரு கிளிக்!