Udhayanidhi Stalin: நம்ம குடும்பமே ஓட்டு போடாம ஏமாத்திட்டாங்க.. ஆதங்கப்பட்ட உதயநிதி!
Udhayanidhi Stalin: நம்ம குடும்பமே ஓட்டு போடாம ஏமாத்திட்டாங்க.. ஆதங்கப்பட்ட உதயநிதி!
மக்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தோம். ஊர், ஊராக, தெருத்தெருவாக போய் ஓட்டு கேட்டோம். நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முழுக்க வாக்கு கேட்டார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியடையந்த நிலையில், அந்த ரிசல்ட் உண்மையிலேயே எதிர்பாராத முடிவு தான் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற திமுக எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அவர், தன்னை வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் நேற்று கலந்துக் கொண்டார். இந்நிகழ்வில் பேசிய அவர், மக்கள் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்ததாகவும், தேர்தல் முடிவுகள் எதிர்பாராத ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் திமுக மட்டுமல்ல தமிழக மக்களும் எதிர்பாராத ரிசல்ட் தான். சொல்லப்போனால் இப்போது இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கூட இந்த முடிவுகளை எதிர்பார்க்கவில்லை. களத்தில் யார் உண்மையான எதிரி என தெரியாமல் திமுக, இல்லாத எதிரியுடன் சண்டை போட்டிருக்கிறது. எங்கே நாம் கோட்டை விட்டோம் என்பதை தவறை உணர வேண்டும்.
அடுத்தமுறை உண்மையான எதிரி யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு தகுந்த மாதிரி செயல்பாடுகளை மேற்கொண்டால் தமிழ்நாடு முழுக்க வெற்றி பெறுவோம். மக்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தோம். ஊர், ஊராக, தெருத்தெருவாக போய் ஓட்டு கேட்டோம். நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முழுக்க வாக்கு கேட்டார். ஆனால் நம்முடைய குடும்பத்தில் ஓட்டு கேட்க மறந்து விட்டோம். நம்ம வீட்டுல இருக்கும் குழந்தைகள், உறவினர்களிடம் திமுகவின் சாதனைகளை சொல்ல தவறி விட்டோம்.
இனிவரும் காலங்களில் திமுக அந்த தவறை திருத்தி நம் வீட்டு குழந்தைகளை அரசியல்படுத்த வேண்டும். கருணாநிதியின் சாதனைகளை, திமுகவின் திட்டங்களை, தவெக அரசின் அவலங்களைப் பற்றி தினமும் நம் வீட்டில் பேச வேண்டும். இந்த புதிய தவெக அரசு கொடுமையைதமிழ்நாட்டு மக்களால் அரை நாள் கூட தாங்க முடியவில்லை. ஆனால், தினமும் பிரச்சனை உண்டாகிறது. சட்டம் ஒழுங்கு விஷயத்தில் நீங்கள் சொதப்பினால் நாங்கள் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமா? நிச்சயம் குரல் கொடுப்போம். கண்டிப்பாக இந்த ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவோம்.
Also Read: திருச்செந்தூரில் நிம்மதியான தரிசனம்.. அமைச்சர் ஆய்வுக்குப் பின் நடந்த மாற்றம்.. வீடியோ வெளியீடு!
மேலும் தேர்தலில் மக்களுக்கு நீங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால் கால அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நல்ல திட்டங்களை நிறுத்தாமல் தொடர வேண்டும். இந்த புதிய அரசு பொறுப்பேற்று 25 நாட்களாகியும் ஒரு திட்டம் கூட கொண்டு வரவில்லை. கூடுதல் செலவில்லாத ஒரு திட்டத்தை தொடங்கி வைக்காத வக்கில்லாத சோஃபா மாடல் ஆட்சி இன்றைக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி