📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Malaysia Tamil May 27, 2026 10:32 PM

உயிரிடீசல் பயன்பாட்டை அதிகரிக்கிறது மலேசியா

உயிரிடீசல் பயன்பாட்டை அதிகரிக்கிறது மலேசியா

கோலாலம்பூர்: மலேசியா, உயிர்டீசலின் பயன்பாட்டை அதிகரித்து வருகிறது. உயர்ந்துவரும் எரிசக்திக் கட்டணங்களைச் சமாளிக்கும் நோக்கத்துடன் உயிர்டீசலைக் கூடுதலாகப் பயன்படுத்த அது திட்டமிடுகிறது. எரிபொருள் இறக்குமதியைச் சார்ந்திருக்கும் போக்கைக் குறைக்கவேண்டும் என்று மலேசியா எண்ணுகிறது.

மலேசியா, பனை எண்ணெய்த் தொழில்துறையின் ஆதரவோடு உயிர்எரிபொருளை அதிக அளவில் பயன்படுத்த முனைந்துள்ளது. உலக எரிசக்திச் சந்தை ஆட்டங்கண்டுள்ள நிலையில் நீண்டகாலத் தீர்வாக அத்தகைய முடிவை எடுத்துள்ளது கோலாலம்பூர்.

எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதனைச் சமாளிக்க அரசாங்கம் மாதந்தோறும் $1.8 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் நிதியுதவி அளித்து வருகிறது. மாற்று எரிபொருளைப் பயன்படுத்துவதற்கான நெருக்குதல் தொடர்ந்து அதிகரித்துவந்த நிலையில், மலேசியாவின் அண்மை முடிவு வந்துள்ளது.

பனை எண்ணெய், சோளம், கரும்பு, சோயாபீன்ஸ் போன்றவற்றிலிருந்து உயிர்எரிபொருள் தயாரிக்கப்படுகிறது.

வழக்கமாகப் பயன்படுத்தப்படும் டீசலைக் காட்டிலும் மாற்று எரிபொருள் அதிகப் பிரபமலாகிவருகிறது. மத்திய கிழக்குப் பதற்றத்தால் விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மாற்று எரிபொருள் இப்போது மலிவான விலையில் கிடைக்கிறது.