📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 04, 2026 04:03 AM

வேளாங்கண்ணி கடலில் மக்கள் குளிக்க தடை

வேளாங்கண்ணி கடலில் மக்கள் குளிக்க தடை

ஆண்டுத்திருவிழா

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்து டன் தொடங்கி நடந்து வருகிறது. இந்த விழா வருகிற 8-ந்தேதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

கடலில் குளிக்கத்தடை

அதிக அளவில் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வந்து கொண்டு இருக்கின்றனர். இதில் சிலர் ஆபத்து தெரியாமல் கடலில் இறங்கி நீண்ட தூரம் சென்று குளித்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு உயிர் சேதம் ஏற்படாத வண்ணம் மாவட்ட நிர்வாகமும் பேராலய நிர்வாகமும் பல்வேறு முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக போலீஸ் சூப்பிரண்டு கேழ்கர் சுப்பிரமணிய பாலச்சந்திரா பரிந்துரையின் பேரில் வருகிற 8-ந்தேதி வரை கடலில் மக்கள் குளிக்க தடை விதித்து கலெக்டர் பிரவீன் குமார் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக வேளாங்கண்ணி கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.