Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
Vilupuram Child Missing: விழுப்புரத்தில் கடந்த 12ம் தேதி காணாமல் போன 7 வயது சிறுமி குறித்து தகவல் அளித்தால், 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என மாவட்ட தவெக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Vilupuram Child Missing: விழுப்புரத்தில் 7 வயது சிறுமி காணாமல் போன விவகாரத்தில், அதே பகுதியை சேர்ந்த சாமியார் மற்றும் அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிறுமி பற்றிய தகவல் - ரூ.2 லட்சம் பரிசு
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியைச் சேர்ந்த 7 வயது சிறுமியான, ஹேமலதா கடந்த 11ம் தேதி அன்று குடும்பத்தாருடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். மறுநாள் அதிகாலை முதல் அவரை காணவில்லை என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் திவிர முயற்சிகளுக்குப் பிறகும் இந்த வழக்கில் எந்தவொரு முன்னேறமும் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாவட்ட தவெக நிர்வாகிகள் சிறுமியின் வீட்டிற்கு சென்று, குடும்பத்தாரை அமைச்சர் ஆனந்திடம் தொலைபேசி வாயிலாக பேச வைத்துள்ளனர். அதோடு, சிறுமி குறித்து ஏதேனும் தகவல் வழங்கினால், 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தவெக வடக்கு மாவட்ட செயலாளர் குணசரவணன் அறிவித்துள்ளார்.
சாமியாரிடம் போலீசார் விசாரணை:
சிறுமி மாயமாகி 5 நாட்களை கடந்துள்ள நிலையில், தஞ்சாவூரை சேர்ந்த சாமியார் சரவணன் மற்றும் அவரது மனைவியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறுமியின் வீட்டருகே உள்ள சிவன் கோயிலில் தங்கியிருந்த அவர்கள், திடீரேன காணமால் போனதால் சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அந்த நபரின் செல்போன் எண் அடிப்படையில் தேடுதலை தீவிரப்படுத்தி, விழுப்புரம் அடுத்த அரசூர் பகுதியில் சரவணன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் சத்தியமங்கலம் காவல்துறைக்கு அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்தபட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்: TN Weather News: சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
சிறுமி மாயம் - நடந்தது என்ன?
கடந்த 12ம் தேதி அதிகாலை முதல் தனது மகளை காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் போலீசார் விசாரணையை தொடங்கினர். புகாரில், ”வீட்டின் வெளி வாசலில் சிறுமியின் பாட்டி படுத்திருந்தார். வீட்டிற்குள் சிறுமி பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 5.30 மணிக்கு விழித்து பார்த்தபோது சிறுமி காணாமல் போனதாகவும் ,அப்போது இரண்டு கதவுகளில் ஒரு கதவு திறந்திருந்ததாகவும்” குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் இரண்டு நாட்களாகியும் எந்தவித தகவலும் கிடைக்காததை தொடர்ந்து, நான்கு டிஎஸ்பிக்கள் தலைமையில் 100 போலீசார்கள் அடங்கிய 8 தனிப்படைகளை அமைத்து மாவட்ட காவல் கண்காளிப்பாளர் மதிவாணன் உத்தரவிட்டார்.
முழு வேகத்தில் விசாரணை:
இதையடுத்து கடந்த 11-ம் தேதி இரவு 11 மணி முதல் 12-ம் தேதி அதிகாலை 3 மணி வரை அந்தப் பகுதியில் இருக்கும் செல்போன் டவர்களில் பதிவான சுமார் 500-க்கும் மேற்பட்ட அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. கிராமங்களைச் சுற்றியிருக்கும் கிணறு உள்ளிட்ட நீர் நிலைகளில் சிறுமி சிக்கியிருக்கிறாரா என்று ஆய்வு செய்யப்பட்டது. அந்த கிராமத்தைச் சுற்றியிருக்கும் போக்சோ வழக்குகள் உள்ளிட்டக் குற்றப் பின்னணி கொண்டவர்களின் பட்டியல் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் வீட்டிற்கு அருகில் இருக்கும் முட்புதர்கள், மலைப் பகுதியில் மோப்ப நாய்களின் உதவியுடன் தேடப்பட்டு வருகின்றன. சந்தேகத்திற்குரிய 10-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டாலும், யாரும் குற்றவாளிகள் என இதுவரை உறுதி செய்யப்படவில்லை. சிறுமியின் புகைப்படத்துடன் கூடிய நோட்டீஸ் தமிழகத்தின் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாயமாகி ஒரு வாரமாகியும் சிறுமி குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகாத சம்பவம் விழுப்புரம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி