📅 Thursday, 20 August 2026 IST | ஆவணி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 20, 2026 09:04 PM

93 நாட்களாக கேள்விகளுக்கான பதில் வரவில்லை: தி.மு.க. உறுப்பினரின் குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் பதில்

93 நாட்களாக கேள்விகளுக்கான பதில் வரவில்லை: தி.மு.க. உறுப்பினரின் குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் பதில்

தமிழக சட்டசபையில் இன்றைய அலுவல்கள் தொடங்கியதும், நேரமில்லா நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படவில்லை. இதனை தொடர்ந்து, சவுதி அரேபியாவில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அ.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதனிடையே திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் கூறுகையில், “சட்டமன்ற உறுப்பினர்கள் வினாக்கள் கொடுத்து 42 நாட்களுக்குள் துறை சார்ந்த பதில் வந்து, வினா பட்டியலில் சேர்க்கப்படும். 93 நாட்களாக கேள்விக்கான பதில் வரவில்லை. அமைச்சர்கள், அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். பதில் அனுப்பாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்” என்று தெரிவித்தார்.

அப்போது பேசிய சட்டமன்ற முன்னவர் செங்கோட்டையன், “துறை சார்ந்த பதில்கள் பெற அமைச்சர்கள் மும்முரம் காட்டுவோம்” என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து திமுக உறுப்பினருக்கு பதில் அளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “2021ல் கொடுத்த கேள்விக்கு 2025ல் பதில் வராத கோப்புகள் உள்ளது. புதிய உறுப்பினர்கள் வந்துள்ளனர். பதில் தாமதமாக வருகிறது, வந்து கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.