📅 Thursday, 13 August 2026 IST | ஆடி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 12, 2026 11:04 PM

அஜித்தின் 'டேர் டெவில்' படத்தில் இணையும் பிரபல நடிகர்கள்!

அஜித்தின் 'டேர் டெவில்' படத்தில் இணையும் பிரபல நடிகர்கள்!

பான் இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ள ‘டேர் டெவில்’ படத்தில் பிரபல நடிகர்களான வெங்கடேஷ் மற்றும் மோகன்லால் ஆகிய இருவரையும் கேமியோ ரோலில் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

நடிகரைத் தாண்டி ரேசிங் வீரர் அஜித்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான 'அமராவதி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

சினிமாவுடன் கார் பந்தயத்திலும் தீவிர ஆர்வம் கொண்டுள்ள அஜித், 'குட் பேட் அக்லி' படத்திற்குப் பிறகு மீண்டும் சர்வதேச ரேசிங் போட்டிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தனது சொந்த அணியான 'அஜித்குமார் ரேசிங்' மூலம் பல்வேறு சர்வதேச தொடர்களில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.

ரேசிங் உலகின் உண்மை தருணங்கள் ஆவணப்படத்தில்

இதற்கிடையில், அஜித்தின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'கிளாடியேட்டர்ஸ் இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்' ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் கூட்டணி

அதனை தொடர்ந்து, 'குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் மீண்டும் இணைந்துள்ளார். அஜித்தின் 64-வது திரைப்படமாக உருவாக உள்ள இந்தப் படத்திற்கு 'டேர்டெவில்' என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரேவ் ஹார்ட்ஸ் புரடக்ஷன்ஸ் என்கிற பெயரில் ஷாலினி அஜித்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

மாத இறுதியில் துவங்கும் படப்பிடிப்பு

ஷாலினி தயாரிக்கும் "டேர் டெவில்" படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித் இந்த படத்திற்கான படப்பிடிப்பை ஒரே கட்டமாக நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கேமியோ ரோலில் பிரபல நடிகர்கள்?

பான் இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ள ‘டேர் டெவில்’ படத்தில் பிரபல நடிகர்களை கேமியோ கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வெங்கடேஷ் மற்றும் மோகன்லால் ஆகிய இருவரையும் கேமியோ ரோலில் நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.