குடும்பமாக சேர்ந்து போட்ட பிளான்.. நடிகரை நம்பி நடுத்தெருவில் நிற்கும் நடிகை.. இது பெரிய ஸ்கேம் போலயே!
சென்னை: சினிமாவில் காதல், திருமணம், பிரிவு என நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை சுற்றி ஏராளமான கதைகள் அவ்வப்போது உலா வருவது வழக்கம். அதிலும் முன்னணி நடிகர் ஒருவரை சுற்றி தற்போது பரவி வரும் ஒரு கிசுகிசு, கோலிவுட்டில் சத்தமே இல்லாமல் பேசப்படும் விஷயமாக மாறியிருக்கிறதாம்.
விஷயம் என்னவென்றால், நடிகர் ஒருவருக்கும் நடிகை ஒருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக நெருக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு இந்த உறவு சென்றுவிட்டதாகவும், நடிகர் தனது மனைவியை விவாகரத்து செய்த பிறகு நடிகையை திருமணம் செய்து கொள்வார் என்றும் பேச்சுகள் கிளம்பின.
இதற்கிடையே, இந்த விஷயம் வெறும் நடிகர், நடிகைக்கு இடையிலான காதல் விவகாரம் மட்டுமல்ல என்றும், நடிகரின் குடும்பத்தினருக்கும் இதுபற்றி முழுமையாக தெரியும் என்றும் ஒரு புதிய கதை கோலிவுட்டில் உலா வருகிறதாம்.
நடிகையின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், திருமணம் குறித்த பேச்சுகளும் தொடர்ந்து நடந்ததாகவும், நடிகர் விரைவில் தனது குடும்ப வாழ்க்கையில் இருந்து வெளியேறிவிடுவார் என்ற நம்பிக்கையும் அவருக்கு கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
மீண்டும் இணைந்த குடும்பம்: இதனால் நடிகையும் இந்த உறவை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், கதை எதிர்பாராத விதமாக வேறு திசையில் திரும்பிவிட்டதாம். காலம் சென்ற நிலையில், நடிகரும் அவரது மனைவியும் மீண்டும் ஒன்றாகிவிட்டதாக தெரிகிறது. குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் எல்லாம் பேசி தீர்க்கப்பட்டதாகவும், தற்போது இருவரும் வழக்கம்போல தங்களது வாழ்க்கையை தொடர்வதாகவும் தகவல்கள் கசிகின்றன. ஆனால், இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும் அதிகம் பாதிக்கப்பட்டது அந்த நடிகைதான் என்கிறார்கள். நடிகரை முழுமையாக நம்பிய நிலையில் இருந்த அவர், தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருவதாகவும் ஒரு பக்கம் கிசுகிசுக்கப்படுகிறது.
பரிதாப நிலையில் நடிகை: இத்தனை நாட்களாக திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில், குடும்பமே மீண்டும் ஒன்றாகிவிட்டதால் நடிகையின் நிலைமைதான் பரிதாபமாகிவிட்டதாக கோலிவுட்டில் சிலர் கிசுகிசுக்கின்றனர். ஆனால், குடும்பமாக சேர்ந்து போட்ட பிளானில் கடைசியில் நடிகை மட்டும் தனியாக நிற்கிறாரே என்ற பேச்சுதான் தற்போது ஹாட் டாப்பிக்காக இருக்கிறதாம்.