Box Office: 4 நாளில் 51 கோடின்னு சொன்னாங்க.. மீசைய முறுக்கு 2 மொத்த வசூல் எவ்வளவு?
சென்னை: சுந்தர். சி மற்றும் குஷ்பு சுந்தர் இணைந்து அவர்களது மகளையும் தயாரிப்பாளராக்கி உருவாக்கிய படம் தான் மீசைய முறுக்கு 2. படம் வெளியான 4 நாட்களிலேயே 51.3 கோடி ரூபாய் வசூல் செய்ததாக போஸ்டரையும் அடித்து வெளியிட்டனர்.
சக்சஸ் மீட் நிகழ்ச்சி கடந்த வாரம் நடந்த போதே மேடையிலும் ஹிப்ஹாப் ஆதி செம ஹேப்பியாக இந்த வசூல் அறிவிப்பை வெளியிட்டு சந்தோஷப்பட்டார்.
ஆனால், 11 நாட்கள் ஆன நிலையில், இந்நேரம் மீசைய முறுக்கு 2 படம் 100 கோடி வசூலை கடந்து மண்டாடி, டிசி போல வெறித்தனமாக பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்து இருக்க வேண்டாமா என தேடி பார்த்த ரசிகர்களுக்கு அதன் வசூல் நிலவரம் கொஞ்சம் கூட உயராமல் அப்படியே நிற்பதை பார்த்து ஷாக் ஆகியுள்ளனர்.
வசூல் வடையா?: ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த மீசைய முறுக்கு 2 திரைப்படம் முதல் 4 நான்கு நாட்களில் 51.3 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழுவினர் தெரிவித்த நிலையில், அதன் பின்னர் படத்தின் வசூல் குறித்த எந்தவொரு அறிவிப்பயும் ஏன் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. அட்லீஸ்ட் 11 நாட்களில் 50 கோடிக்கும் மேலாவது படத்தின் வசூல் வந்திருக்க வேண்டாமா என்றும் ட்ரோல்கள் பறந்து வருகின்றன.
டோரத்தியுடன் போட்டி: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் நடித்த டோரத்தி படத்துடன் போட்டியாக மீசைய முறுக்கு 2 படம் வெளியானது. படத்தின் பாடல்கள் எல்லம ஹிட் அடித்த நிலையில், ஆரம்பத்தில் படம் செமையாக பிக்கப் ஆனது. ஹிப்ஹாப் ஆதியும் ஆரம்பத்தில் புரமோஷன், தியேட்டர் விசிட் என பறந்துக் கொண்டிருந்த நிலையில், சட்டென அப்படியே அனைத்தையும் விட்டு விட்டார். டோரதி திரைப்படம் இதுவரை ஒட்டுமொத்தமாக 12 கோடி மட்டுமே வசூல் வந்தது என்றும் அதை விட மீசைய முறுக்கு 2 நல்ல வசூல் வேட்டை நடத்தியது என்று கூறுகின்றனர்.
11 நாள் வசூல் எவ்வளவு?: சாக்னிக் வெளியிட்ட தகவல் படி 11 நாட்களில் இதுவரை மொத்தமாக மீசைய முறுக்கு 2 திரைப்படம் 43.21 கோடி ரூபாய் தான் உலகளவில் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், படக்குழு 4 நாட்களில் அறிவித்த வசூல் அறிவிப்புக்கும் இந்த பாக்ஸ் ஆபீஸ் கணிப்புக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லையே என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன.
அதிக எண்ணிக்கையில் புதிய படங்கள்: மீசைய முறுக்கு 2 படத்தின் வசூல் அப்படியே குறைய முழு காரணமே புதிதாக கடந்த வாரம் 5 பெரிய படங்கள் தியேட்டர்களை நோக்கி படையெடுத்தது தான் என்கின்றனர். விஜய் சேதுபதியின் பத்தா படத்தை தவிர அதில் வேற எந்தவொரு படமும் பெரிதாக ஓடவில்லை என்றாலும், மீசைய முறுக்கு 2 படம் ஓடிய தியேட்டர்கள் மற்ற படங்களுக்குச் சென்ற நிலையில், படத்தின் வசூல் அப்படியே நின்று போய்விட்டதாக சில தகவல்கள் கூறுகின்றன.