📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 07, 2026 02:04 AM

இளைஞர்களுக்காக ’டேட்டிங் ஆப்’; அரசின் அதிரடி முடிவு

இளைஞர்களுக்காக ’டேட்டிங் ஆப்’; அரசின் அதிரடி முடிவு

இளைஞர்களுக்காக ’டேட்டிங் ஆப்’; அரசின் அதிரடி முடிவு

ஆசிய நாடுகளில் பிறப்பு விகிதம் கணிசமான அளவில் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. குறிப்பாக, இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், சர்வதேச அளவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், குறிப்பிட்ட நாடுகள் முதியோர்கள் அதிகம் நிறைந்த நாடுகளாக மாறிவருகின்றன.

இந்நிலையில், பல நாடுகளில் பிறப்பு விகிதத்தை உயர்த்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், சிங்கப்பூரிலும் பிறப்பு விகிதம் 0.87 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், சிங்கப்பூரில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதோடு, முதியோர்கள் அதிகம் நிறைந்த நாடாகவும் மாறுவதைத் தடுக்க அரசு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, நாட்டில் பிறப்பு விகித சரிவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இளைய தலைமுறையைக் கவர பல்வேறு சலுகைகளுடன் சிங்கப்பூர் அரசாங்கம் ’பர்ஸ்ட் டேட்’ என்ற புதிய டேட்டிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டில் திருமணங்கள் குறையும் சூழலை மாற்றியமைக்கவும், இளைஞர்கள் மத்தியில் குடும்ப வாழ்க்கையை ஊக்குவிக்கவும் சிங்கப்பூர் அரசு இந்த புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.

இதன் மூலமாக இளைஞர்கள் தங்களுக்கான துணையை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இதில், போலிக் கணக்குகள் உருவாக்க முடியாது என்பதால் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அரசின், ’சிங்பாஸ்’ மூலமாக மட்டுமே இதில் கணக்குகளைத் தொடங்க முடியும் என்பதால், இதில் தவறான அல்லது போலியானக் கணக்குகளை உருவாக்க வாய்ப்புகள் இல்லை என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம் இணையும் ஜோடிகளுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட உணவகங்கள், திரையரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் சிறப்புத் தள்ளுபடிகள் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.