📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 02, 2026 07:01 AM

சட்டப்பேரவையில் தொடரும் தமிழ் உச்சரிப்பு தடுமாற்றம்: ‘மன்மத நன்றி’ என மீண்டும் ஒரு தடுமாற்றம்

சட்டப்பேரவையில் தொடரும் தமிழ் உச்சரிப்பு தடுமாற்றம்: ‘மன்மத நன்றி’ என மீண்டும் ஒரு தடுமாற்றம்

சட்டப்பேரவையில் தொடரும் தமிழ் உச்சரிப்பு தடுமாற்றம்: ‘மன்மத நன்றி’ என மீண்டும் ஒரு தடுமாற்றம்

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உறுப்பினர்கள் பேசும்போது தமிழ் வார்த்தைகளை உச்சரிப்பதில் ஏற்படும் தடுமாற்றங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. குறிப்பாக, ‘மனமார்ந்த நன்றி’ என்ற வார்த்தையை தவறாக உச்சரித்த சம்பவங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன. கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் ஏற்கனவே சட்டப்பேரவையில் பேசும்போது ‘மனமார்ந்த நன்றி’ என்பதற்கு பதிலாக ‘மன்மத நன்றி’ எனக் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவரது பேச்சு தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது. இதேபோல், அமைச்சர் ஜெகதீஸ்வரி சட்டப்பேரவையில் பேசியபோதும் சில தமிழ் வார்த்தைகளை உச்சரிப்பதில் தடுமாற்றம் ஏற்பட்டதாகவும், அது உறுப்பினர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் பேசும்போதும் இதேபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது. தனது உரையின் முடிவில் ‘மனமார்ந்த நன்றி’ எனக் கூற முற்பட்ட அவர், முதலில் ‘மன்மத நன்றி’ என தவறுதலாகக் கூறினார்.

பின்னர் தனது தவறை உணர்ந்த அவர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு சரியான வார்த்தையை உச்சரித்து தனது உரையை முடித்தார். இந்த சம்பவம் சட்டப்பேரவையிலும் கவனம் பெற்றதுடன், சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது. இதனால், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் அரசியல் பேச்சுகளுடன், அவர்கள் பயன்படுத்தும் தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பும் தற்போது சமூக வலைதளங்களில் தனி கவனத்தை ஈர்த்து வருகிறது.