இலங்கை டெஸ்ட் தொடரிலிருந்து சாய் சுதர்சன் விலகல்? இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு
இலங்கை டெஸ்ட் தொடரிலிருந்து சாய் சுதர்சன் விலகல்? இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு
ஒருவேளை சாய் சுதர்சன் விலகியது உறுதியாகும் பட்சத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அவருக்கான இடத்தை நிரப்ப மற்றொரு இளம் இடதுகை பேட்டரான தேவ்தத் படிக்கல் முன்னிலையில் உள்ளார்.
Published : August 8, 2026 at 9:00 PM IST
ஹைதராபாத்: இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து, இந்திய அணியின் நட்சத்திர வீரர் சாய் சுதர்சன் காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 ஆம் தேதி கொழும்பிலுள்ள சின்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொடரில் பங்கேற்பதற்காக ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே இலங்கை சென்றடைந்துள்ளது. டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, கொழும்பு நோன்டிஸ்கிரிப்ட்ஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் இலங்கை லெவன் அணிக்கு எதிரான 3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. இது ஒருபுறமிருக்க, இந்திய அணியில் வீரர்கள் அடுத்தடுத்து காயத்தைச் சந்தித்து வருவது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
Sai Sudharsan has been ruled out of the Test series against Sri Lanka. pic.twitter.com/SqyaEIBwU5
அந்த வகையில், ஏற்கனவே ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், தற்பொழுது சாய் சுதர்சனும் காயம் காரணமாக இலங்கை தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இந்தியா ஏ அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது, சாய் சுதர்சனுக்கு காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவப் பரிசோதனையில் இருந்து வந்தார்.
இந்நிலையில், சாய் சுதர்சனின் காயம் முழுமையாகக் குணமடையாததன் காரணமாக, மருத்துவர்களின் அறிவுரைப்படி இந்த டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் சாய் சுதர்சன் சிறப்பான ஃபார்மில் உள்ள நிலையில், தற்பொழுது அவரது இந்த விலகல் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
Sai Sudharsan confirmed out of both Sri Lanka Tests. 🛑Toe injury → more recovery time ordered.Padikkal has already made his case with a century in the on going warm-up match.Sarfaraz Khan is the next name that keeps coming up but PTI reports key coaching & selection… pic.twitter.com/j7Dr0xaOVV
இதையும் படிங்க: